பாண்டா கரடி ஜியா ஜியா கருத்தரிக்கவில்லை

1 mins read
6d96dacb-ef6f-4ed1-bfb2-bcc665ac16a3
ஜியா ஜியா பாண்டா கரடி ஆரோக்கியமாக இருப்பதாகவும் வனவிலங்குத் தூதராக அது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள பாண்டா கரடியான ஜியா ஜியா கருத்தரிக்கவில்லை என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஜியா ஜியா இயற்கையான முறையில் கருத்தரிக்க தேவையான சூழல் ஏற்படுத்தித் தரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, செயற்கைக் கருத்தரிப்புக்கும் ஏப்ரல் 25ல் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், அவை அனைத்தும் பலனளிக்கவில்லை என்று குழுமம் கூறியது.

ஜியா ஜியா பாண்டா கரடி ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் வனவிலங்குத் தூதராக அது தொடரும் என்றும் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் விலங்கு மருத்துவச் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் விலங்கியல் திட்டங்களுக்கான துணை உதவித் தலைவர் டாக்டர் ஹெங் யிருய் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்