புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள தெம்பனிஸ் சங்காட் தனித் தொகுதியில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேட்பு மனுத் தாக்கலன்று மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி இருப்பது உறுதியானது.
மசெக வேட்பாளராக டெஸ்மண்ட் சூவும் பாட்டாளிக் கட்சி வேட்பளாராக கென்னத் ஃபூவும் மோதுகின்றனர்.
47 வயதாகும் திரு சூ, தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளராக உள்ளார்.
2011ஆம்ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த அவர் அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் ஹவ்காங் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
இருமுறையும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களோடு மோதிய அவர், இப்போதும் தெம்பனிஸ் சங்காட்டில் அதே கட்சி வேட்பாளரைச் சந்திக்கிறார்.
2015 தேர்தலில் நீ சூன் குழுத் தொகுதியிலும் 2020 தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியிலும் பாட்டாளிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கென்னத் ஃபூவுடன் திரு சூ மோதுகிறார்.