தேர்தல் முடிவுகள் தரும் பாடத்தை ஏற்றுச் செயல்படுவோம்: மசெக

1 mins read
cd31aa9d-0f3e-4b5b-83d3-2f09b1a9763e
(இடமிருந்து) பிரதமர் லாரன்ஸ் வோங், அவரது மார்சிலிங்-இயூ டீ சகாக்கள் ஹானி சோ, அலெக்ஸ் யாம், ஸாக்கி முகம்மது ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மார்சிலிங் சந்தையில் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 65.57 விழுக்காடு வாக்குகளுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இதையடுத்து. ஆளும் மக்கள் செயல் கட்சி தலைவர்கள் சிங்கப்பூர் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மக்கள் நீடித்த ஒற்றுமையுடன் வெளிப்புற சூழலில் ஏற்படக்கூடிய அபாயங்கள், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விளக்கியுள்ளனர்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி கூறும் விதமாக மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், தொகுதி உலா மேற்கொண்டனர்.

அப்பொழுது, தேர்தல் முடிவுகள் கட்சிக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பிரதிபலிப்பதாகக் கூறினர்.

எனினும், கட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் சவால்மிக்க உலகச் சூழலை சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ள அவர்களைத் தயார்ப்படுத்தவும் வேண்டும் என்று வலிறுயுறுத்தினர்.

நடந்து முடிந்த தேர்தலில் மசெக தான் முன்னர் வெற்றி பெற்ற அனைத்துத் தொகுதிகளையும் தக்கவைத்துக் கொண்டது.

அதேபோல் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியும் தனது அல்ஜுனிட், ஹவ்காங், செங்காங் தொகுதிகளை தக்கவைத்துக் கொண்டு 10 நாடாளுமன்ற இடங்களை வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்