போப் ஃபிரான்சிஸ் அவர்களின் ஆசிய-பசிபிக் வட்டார நாடுகள் பயணத்தின் முடிவில் அவரிடம் சிங்கப்பூர் பற்றி அவர் கொண்டிருக்கும் பார்வை என்ன என்று கேட்கப்பட்டது.
புன்முறுவலுக்கிடையே பதிலளித்த போப்பாண்டவர், “சிங்கப்பூர் இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதை அனைவரும் கிழக்கே இருக்கும் நியூயார்க் என்று கூறுகின்றனர். இது நன்கு பராமரிக்கப்படும் நாடு, சுத்தமாக, பணிவன்புடன் இருக்கும் மக்களுடன். இங்கு பெருமைவாய்ந்த கட்டடங்களுடன் வலுவான பல சமயக் கலாசாரமும் உள்ளது. இங்கு நான் பங்கேற்ற அனைத்து சமய கூட்டங்களும், பலர் நட்புணர்வுடன் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றன,” என்றார்.
இங்கு பல சமயத்தவரும் அமைதியாக பரஸ்பர மரியாதையுடன் வாழும் நட்பார்ந்த முறை குறித்து 87 வயது போப்பாண்டவர் பலமுறை கூறினார்.
மேலும், சிங்கப்பூர் அடுத்த வாரம் எஃப்1 கார் பந்தய நிகழ்ச்சியை நடத்தப்போவது குறித்து பேசிய போப் ஃபிரான்சிஸ், சிங்கப்பூர் பல கலாசாரங்கள் சங்கமிக்கும் இடமாக இருப்பது கண்டு ஆச்சரியமடைந்தார்.

