தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப் வருகையையொட்டி கத்தோலிக்க மையத்தில் குவிந்திருக்கும் நினைவுப்பொருள்கள்

2 mins read
87cabef2-a311-4d12-b7de-a20ca4f4ed54
ஜகார்த்தாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் போப் பிரான்சிஸ். - படம்: ஏஎஃப்பி

போப் பிரான்சிஸ் அடுத்த வாரம் சிங்கப்பூர் வரவிருக்கும் வேளையில் வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள கத்தோலிக்க மையத்தில் ஏராளமான நினைவுப்பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

டி-சட்டைகள், குடைகள், குவளைகள், தொப்பிகள் மற்றும் கைப்பைகள் போன்ற நினைவுப்பொருள்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்பட்டு உள்ளன.

கத்தோலிக்க சமூக முயற்சிகளுக்காக அந்த மையத்தில் நடைபெறும் நிதித்திரட்டில் அந்தப் பொருள்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இளையருக்கான பள்ளிக்கூட புத்தகப் பைகள், பொம்மைகளும் வத்திகன் கொடியின் நிறம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

செப்டம்பர் 12ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் நடத்தப்படும் வழிபாட்டைக் குறிக்கும் சில அரிய பொருள்களும் விரைவில் விற்பனைக்கு வரும்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நான்கு நாடுகளுக்கு 11 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் 87 வயது போப் பிரான்சிஸ், செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூரில் இருப்பார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொண்டிருக்கும் ஆக நீண்ட பயணம் இது.

அத்துடன், கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு அவர் பயணம் செய்வது இதுதான் முதல்முறை.

செப்டம்பர் 3ஆம் தேதி இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் தமது பயணத்தைத் தொடங்கிய அவர், தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய பள்ளிவாசலான இஸ்டிக்லால் பள்ளிவாசலில் அனைத்து சமயக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் விளையாட்டரங்க வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழிபாட்டுக்கு அவர் தலைமை ஏற்றார்.

ஏறத்தாழ 80,000 கத்தோலிக்கப் பெருமக்கள் அதில் கலந்துகொண்டனர்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுவரை போப் பிரான்சிஸ் பாப்புவா நியூகினியில் இருப்பார்.

குறிப்புச் சொற்கள்