பிள்ளைகளுக்கு மில்லியன் வெள்ளி மதிப்பிலான அன்பளிப்புகளை வழங்கும் பெற்றோர்

பிள்ளைகளுக்கு மில்லியன் வெள்ளி மதிப்பிலான அன்பளிப்புகளை வழங்கும் பெற்றோர்

2 mins read
5d1dfd94-9895-46cd-aa84-b1335654ad3b
அண்மையில், மில்லியன் வெள்ளி மதிப்பிலான வழங்கீடுகளின் தொடர்பில், இரண்டு தம்பதியர் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. - சித்திரிப்பு: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெற்றோர் திருமணமான தங்கள் பிள்ளைகளுக்குப் பெரிய அளவில் பணம் வழங்கினால், அந்தப் பணம் அவர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமா அல்லது கணவன் மனைவி இருவருக்குமே சேருமா?

இந்தக் கேள்வி ஏறுக்குமாறாக இருக்கலாம். ஆனால், அத்தகைய சூழ்நிலைகளில் சிக்கும் தம்பதியர் நீதிமன்றத்திற்குச் செல்லும் அளவிற்கு அதனைக் கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர்.

கடந்த 2025ஆம் ஆண்டில் கணவரின் தாயாரிடமிருந்து $1.14 மில்லியன் வெள்ளியைப் பெற்ற ஒரு தம்பதியர் அதன் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இதே போன்ற மற்றொரு வழக்கு 2021ஆம் ஆண்டில் நடந்தது.

இத்தகைய கேள்விக்கு நேரடிப் பதில் கிடையாது. காரணம், அந்த இரண்டு வழக்குகளிலும் ரொக்க வழங்கீடுகளுக்கான காரணங்களைக் காட்டும் உண்மையான விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எனவே, பெற்றோர் பிள்ளைக்குக் கொடுக்கும் பணம், பிள்ளைக்கு மட்டுமே சொந்தமாகும், வாழ்க்கைத் துணைவருக்கு அது கிடைக்காது.

கடந்த 2025ஆம் ஆண்டு வழக்கில், கணவரின் தாயார் அந்தத் தம்பதியரின் $5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான வீட்டை வாங்க உதவினார். அவர் $1.14 மில்லியன் வெள்ளி முன்பணம் செலுத்தியிருந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தம்பதியர் பிரிந்ததும், அந்தத் தொகையில் ஒரு பகுதி தமக்கும் கிடைக்கவேண்டும் என்று மனைவி கோரினார். தமது முன்னாள் மாமியார் தங்களின் முதல் வீட்டை வாங்குவதற்காகக் கொடுத்த அன்பளிப்பு என்பதே அதற்குக் காரணம் என்றார் அந்த மனைவி.

இருப்பினும், கணவர் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. தாயாரிடம் உதவிக் கேட்டதால் அவர் கொடுத்த கடன் அது என்று அந்தக் கணவர் கூறினார்.

இறுதியில், அந்தத் தம்பதியருக்கு இருந்த அனைத்துச் சொத்துகளின் மதிப்பைக் கணக்கிட்டு, கணவருக்கு 3 மில்லியன் வெள்ளிக்கு அதிகமாகவும் மனைவிக்கு எஞ்சிய $1.7 மில்லியன் வெள்ளியும் கிடைத்தன.

பெற்றோரிடமிருந்து பெரிய அளவில் பணம் பெறுவது நிச்சயம் பலனளித்தாலும், அது ஒருவரைச் செல்வந்தராக மாற்றிவிடாது. ஏனெனில், சொந்தச் சேமிப்பையும் சொத்துகளையும் உருவாக்க, ஒருவர் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் - அந்த இரண்டு வழக்குகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிதிப் பாடங்கள் இவை.

குறிப்புச் சொற்கள்