தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பகுதி சேதமடைந்த கடைவீடு, கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: பிசிஏ

2 mins read
4994790b-d7b3-4951-9de4-971d6baa6d85
வாடிக்கையாளர்கள் உணவகத்துக்கு உட்புறமாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.   - படம்: ஷின் மின்

ஈஸ்ட் கோஸ்ட்டில் உள்ள ஒரு கடைவீட்டின் முகப்புப் பகுதிகள் ஜனவரி 1ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தன. ஆனாலும் கட்டடத்தின் கட்டமைப்பின் உறுதியை அது பாதிக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

51 ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள போருக்கு முந்தைய இரண்டு மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் பிரபல உணவகமான 328 காத்தோங் லக்சா அமைந்துள்ளது.

கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) ஜனவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், புத்தாண்டு தினத்தன்று, சுமை தாங்காத கட்டட முகப்பின் ஒரு பகுதியைச் சேர்ந்த கான்கிரீட் விழுந்துவிட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று தெரிவித்தது.

“எங்கள் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, சேதம் கட்டடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையை பாதிக்கவில்லை,” என்று அறிக்கை பிசிஏயின் கூறியது.

ஆபத்தை அகற்றவும், விரிவான விசாரணை மேற்கொள்ளவும், நிரந்தர சீர்திருத்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க ஒரு தொழில்முறை பொறியாளரை நியமிக்குமாறு கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிசிஏ தெரிவித்துள்ளது.

சேதமடைந்த முகப்பின் கீழ் வெளிப்புற இருக்கை பகுதி பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்தாலும், உணவகம் வர்த்தகத்திற்காக இன்னும் திறந்திருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் உணவகத்துக்கு உட்புறமாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக ஷின் மின் நாளிதழ் விவரித்தது.

அந்த உணவகம் சுமார் 24 ஆண்டுகளாக அந்த இடத்தில் வாடகைக்கு இருந்து வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட பகுதி சில மாதங்களுக்கு முன்பு சிறிய விரிசல்களைக் காட்டத் தொடங்கியது என்றும் 328 காத்தோங் லக்சா உணவகத்தின் நிறுவனர் நேன்சி கோ, பிசிஏ அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்