‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட் சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டம்’: பங்கேற்பாளர் உயிரிழப்பு

1 mins read
7e628d13-c93c-451b-936b-e41d1620aeb4
‘ஸ்டாண்சார்ட் நெடுந்தொலைவு ஓட்டம் 2024’ல் டிசம்பர் 1ஆம் தேதி பந்தயத்தைத் தொடங்கும் பங்கேற்பாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட் சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டம் 2024’ன் ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பாளர் ஒருவரின் மரணத்தை, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில் உறுதிசெய்துள்ளனர்.

“பந்தயம் முடிந்ததும் அந்தப் பங்கேற்பாளருக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு தேவைப்பட்டது.

“சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னர், அவருக்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டது,” என்று நெடுந்தொலைவு ஓட்டத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.

“பங்கேற்பாளரின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க முன்வருவோம். பங்கேற்பாளருக்கு உடனடிக் கவனிப்பை வழங்கிய மருத்துவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட் சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டத்தின்’ வரலாற்றிலேயே ஏற்பட்டுள்ள மூன்றாவது மரணம் இது.

குறிப்புச் சொற்கள்