சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குத் தெம்பனிஸ் வட்டாரத்தில் களமிறங்க விரும்பும் அரசியல் கட்சிகள் வட்டாரத்தின் நிலையை நன்கு அறிந்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
பட்டாளிக் கட்சி அங்குக் களமிறங்கக்கூடும் என்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
தெம்பனிஸ் வட்டாரத்துக்கான முக்கிய அமைச்சராக இருக்கும் திரு மசகோஸ் வட்டாரத்துக்கு வர விரும்பும் வரும் கட்சிகள் எதற்கு வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றார்.
அவர் தெம்பனிஸ் ஹப் மன்றத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைத்த அவர், தெம்பனிஸ் குழுத்தொகுதியிலும் புதிய தெம்பனிஸ் சாங்காட் தனித்தொகுதியிலும் நான்முனைப் போட்டி நடைபெறக்கூடும் என்று கருதப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமைக் கட்சியும் மக்கள் சக்திக் கட்சியும் ஏற்கெனவே அங்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
தெம்பனிஸ் நார்த்தில் தேவைக்கேற்ப கட்டப்படும் புதிய வீடுகளில் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து வருகின்றனர்.
தெம்பனிஸ் வட்டாரத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராகக் கடந்த 19 ஆண்டுகள் சேவையாற்றிய திரு மசகோஸ் தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் தெம்பனிஸ் சமூகத்தைத் தொடர்ந்து கட்டியெழு இருப்பதாகவும் சொன்னார்.