தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரமமான காலத்தைக் கடந்துசெல்ல மசெகவை ஆதரிப்பீர்: ஹமீது ரசாக்

8 mins read
06d1e3f3-cab6-40e1-9b24-69320c2d47b3
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி மசெக வேட்பாளர் டாக்டர் ஹமீது ரசாக். - தொலைக்காட்சிப் படம்

உலகளவில் முக்கியமான மாற்றங்கள் நிகழும் வேளையில் நமது தேர்தல் நடக்கிறது. நம்மை நோக்கி புயல் வீசுகின்றது என்று கட்சி அரசியல் ஒலிபரப்பில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி மசெக வேட்பாளர் டாக்டர் ஹமீது ரசாக் பேசினார்.

தமிழில் உரையாற்றிய அவர், “ஆக அண்மையில் அமெரிக்கா விதித்த ஏற்றுமதி வரிகளும் அதனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலும் உலகப் பொருளியலைப் பாதிக்கத் தொடங்கிவிட்டன. சிங்கப்பூருக்கு 10% விதிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் நம் பொருளியலுக்கு முக்கியமான மருந்தியல், பகுதி மின்கடத்தி உள்ளிட்ட துறைகளுக்கும் வரிகள் விதிக்கப்படலாம்,” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “உலகளாவிய தேவையும் சந்தைகள் மீதான நம்பிக்கையும் குறைந்து வருகிறது. இவற்றால் நமது ஏற்றுமதிகள் பாதிக்கப்படும். சிறிய, பெரிய நிறுவனங்கள் என அனைவரும் அவர்களுடைய அக்கறை பற்றி எங்களிடம் கூறியுள்ளனர்.

டாக்டர் ஹமீது மேலும் பேசுகையில், “ஊழியர்கள் தங்கள் வருமானம், வேலைகள் பற்றி பதற்றமாக உள்ளனர். இந்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்று எதிர்பார்க்கிறோம். பொருளியல் மந்தநிலையைத் தவிர்க்க முடியாது. அது ஏற்பட்டால், ஆட்குறைப்பும் வேலை இழைப்பும் கண்டிப்பாக நேர்ந்திடும்.

“இது குறுகியகால வீழ்ச்சி அல்ல. நம்மைச் சுற்றியுள்ள உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. பெரிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துவருகிறது. சுருக்கமாகச் சொன்னால், இத்தனை ஆண்டுகளாக, நமது வாழ்வாதாரம், பாதுகாப்பு, வெற்றி ஆகியவற்றுக்கு அடிப்படையாகத் திகழ்ந்துவந்த உலகச் சூழல் இப்போது சிதைந்துவருகிறது.

“இதுபோலவே, 60 ஆண்டுகளுக்கு முன்னர், நாம் மலேசியாவிலிருந்து பிரிந்துவந்தோம். அதன் பின்னர், 1968ஆம் ஆண்டில் பிரிட்டி‌ஷ் படைகள் சிங்கப்பூரைவிட்டு வெளியேறியபோது நாமே நம்மைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது, யார் உங்களை ஆட்சி செய்வர் என்பது அத்தியாவசியக் கேள்வியாக உருவெடுத்தது. அது அரசியல் பற்றியது மட்டுமல்ல - மாறிவரும் உலகில் நாம் முன்னேறி வாழ்வதற்கு, வழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பற்றியது.

“நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டும், சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும், எல்லாருக்கும் மேம்பட்ட எதிர்காலத்தை உறுதிசெய்யவேண்டும் - ஆரம்பகாலம் முதல் இதுவே மக்கள் செயல் கட்சியின் (மசெக) இலக்காக இருந்துவந்துள்ளது. 60 ஆண்டுக்கும் மேலாக, நாங்கள் உங்களோடு பணியாற்றியுள்ளோம். உங்களுக்குச் சேவையாற்ற, உங்களுக்கு ஆதரவளிக்க, உங்களுக்குத் துணைநிற்க - நாங்கள் கொண்டுள்ள கடப்பாடு அளவிடற்கரியது. நாங்கள் செய்வன எல்லாவற்றிலும் நீங்களே முதன்மை பெற்றிருப்பீர்கள்.

“அண்மைய ஆண்டுகளில், அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், நாங்கள் அதிகம் செய்துள்ளோம். உக்ரேன், மத்திய கிழக்கு ஆகியவற்றில் ஏற்படும் பூசல்களையடுத்து, உலகளாவிய பணவீக்கம் அதிகரித்ததால், இந்தப் பிரச்சினைகள் மோசமாகின.

இதனால்தான், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், விரிவான ஆதரவுத் தொகுப்புத்திட்டம் இடம்பெற்றிருந்தது. சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள், ரொக்க வழங்குதொகைகள், பயனீட்டுத் தள்ளுபடிகள் என பல்வேறு உதவித் திட்டங்கள் வரும் மாதங்களில் முறையாக அமல்படுத்தப்படும். பொதுவாக, இந்த நிதியாண்டில் இரண்டு பிள்ளைகளுடன் நான்கு பேர் அடங்கிய குடும்பம் சுமார் 5,000 வெள்ளி மதிப்புடையே உதவியைப் பெறக்கூடும். குறைந்த வருமானக் குடும்பங்கள் கூடுதல் உதவி பெறும்.

தற்போதைய பொருளாதார, வர்த்தக நிச்சயமற்ற சூழலைச் சமாளிக்கும் பொருட்டு, துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான பொருளியல் மீட்சிப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்துவருகிறோம். மோசமடைந்தால், நம் தொழில்கள், ஊழியர்கள், குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி அளிப்போம். உதவி தேவைப்படும் காலம் வரை நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம் - இது உங்களுக்கான எங்களின் உத்தரவாதம். எப்போதும் நாங்கள் உங்களைக் கைவிடமாட்டோம்.

சிங்கப்பூரர்கள் உடனடியாக பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க நாங்கள் உதவும் இவ்வேளையில், மக்கள் செயல் கட்சி அரசாங்கம், வருங்காலத்திற்குத் திட்டமிடவும் சிங்கப்பூரர்களை ஆயத்தப்படுத்தவும் என எப்போதும் முன்னோக்கிச் செயல்படும்.

நம் பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் நாம் தொடர்ந்து தரமான கல்வியையும் வருங்காலத்திற்குத் தேவையான திறன்களையும் அளித்திடுவோம். அளவுக்கு அதிகமான சுமையையும் மன உளைச்சலைத் தணிக்கும் அதேவேளையில், நமது கல்விமுறை ஏற்கெனவே மாற்றங்களைக் கண்டுள்ளது. குறைவான தேர்வுகள்; தர வகைப்பாடு கிடையாது; எல்லாரும் தங்கள் திறமையைக் கண்டறிந்து, முழு ஆற்றலை உணர்வதற்கு உதவக்கூடிய பல்வகைப் பாதைகள் உண்டு.

வேலை செய்யும் பெரியவர்கள் எல்லாருக்கும் நல்ல வேலைகளையும் அர்த்தமுள்ள வாழ்க்கைத் தொழிலையும் உறுதிசெய்வோம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ச்சி காணும்போது அல்லது புதிய துறைக்கு மாறிச் செல்லும்போது, நீங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் உங்கள் கனவுகளை நம்பிக்கையோடு பின்தொடர்வதற்கும் நாங்கள் உதவுவோம். பின்னடைவுகள் கட்டாயம் ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில், மேலும் பாதுகாப்பான திட்டங்களோடு நாங்கள் உடனிருப்போம் - உங்களைத் தாங்கிப் பிடிப்பதற்கு; உங்களைக் கைதூக்கிவிடுவதற்கு; நீங்கள் மேலும் வலிமையாக மீண்டு வர உதவுவதற்கு.

குடும்பங்களுக்கான மேலும் சிறந்த இடமாக சிங்கப்பூரை மாற்றியமைப்போம். பிள்ளைகளுக்கும் பெரிய குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவு அளிப்போம். பொது வீடமைப்பைக் கட்டுப்படியாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் வைத்திருப்போம். வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள், நாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல், 100,000க்கும் அதிகமான தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளைக் கட்டி முடித்திருப்போம்.

மேலும் ஆரோக்கியமான சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். நாங்கள் நோய்களைத் தடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்திவருகிறோம். அப்போதுதான், சிங்கப்பூரர்கள் - குறிப்பாக, நம் மூத்தோர் - துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் தொடர்ந்து வாழ முடியும். தரமான சுகாதாரப் பராமரிப்பு எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இருப்பதை நாங்கள் உறுதிசெய்வோம். ஒவ்வொரு வட்டாரத்திலும், ஆற்றல் மிகுந்த சமூகப் பராமரிப்புத் திட்டங்களும் மூத்தோருக்கு உகந்த உள்கட்டமைப்புகளும் இருக்கும். அப்போதுதான் நம் முத்தோர் அமைதியாக, தன்மானத்துடன், கனிவாக மூப்படைய முடியும்.

எண்ணற்ற வாய்ப்புகள் உள்ள ஒரு சிங்கப்பூரே எங்களுக்கு வேண்டும். அங்கே யாரும் பின்தங்கிவிடக்கூடாது. ஒரு சிங்கப்பூர் - அங்கே ஒவ்வோர் ஊழியரும் மதிக்கப்படவேண்டும்; ஒவ்வொரு முயற்சியும் அங்கீகரிக்கப்படவேண்டும்; ஒவ்வொரு குடிமகனும் தம் கனவைப் பின்தொடர்ந்து தம்முடைய மிகச் சிறந்த ஆற்றலை உணரவேண்டும்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில், நீங்கள் எங்களுடன் பகிர்துகொண்ட எண்ணங்களையே இவை பிரதிபலிக்கின்றன. நம் அனைவரின் இந்த ஒருமித்த நம்பிக்கையை நிஜமாஉண்மையாக்குவதற்கே நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம். மக்கள் செயல் கட்சி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளலாம். நாங்கள் வெறுமனே வாக்குறுதி அளிப்பதில்லை. நாங்கள் திட்டமிடுவோம்; செயல்படுவோம்; சாதித்துக் காட்டுவோம்.

அதனைத் தொடர்ந்து செய்ய, நாம் நம் குழுவைப் புதுப்பித்துக் கொண்டிருக்கவேண்டும் - நேர்மையும் சேவையாற்றும் மனப்பான்மையும் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களை அழைத்து வரவேண்டும். அவர்களிலிருந்து புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவோம். எங்கள் குழுவில் பழுத்த அனுபவங்களும் இருக்கும்; புத்தம்புதிய எண்ணங்களும் சிந்தனைகளும் இருக்கும். சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய அணி இது.

“மக்கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்யவேண்டும்; ஆனால், நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரல்களும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பும் சிங்கப்பூரர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

எங்களுக்கு இந்த எண்ணங்கள் புரியாமல் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. கடந்த தேர்தலில், அது ஒரு மடங்கு அதிகரித்தது. எதிர்க்கட்சி என்பது இங்கே இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. பொறுப்புணர்வு மிகுந்த எதிர்க்கட்சிக்குப் பங்கு உள்ளது என்பதில் நாங்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

ஆனால், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராக மட்டுமின்றி, உங்களின் பிரதமராகவும் உங்களுக்குத் தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்க விரும்புகிறார்.

“தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்த பின்னர், போட்டி, மக்கள் செயல் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலானது அல்ல; சிங்கப்பூருக்கும் உலகிற்கும் இடையிலானது. அந்த உலகத்தில் பலதரப்பட்ட சவால்களும் மிரட்டல்களும் சூழ்ந்துள்ளன.

“தேர்தல் முடிவுகள், உங்களுக்குச் சேவையாற்றவிருக்கும் அரசாங்கத்தின் செயல்திறனை நிர்ணயிக்கும். நிச்சயமற்ற இத்தகைய சூழல்களில், ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதற்கான புதிய பாதையை வகுத்திட நாம் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறோம் என்பதை அதுவே முடிவுசெய்யும்.

கடந்த ஓராண்டாக, அவர் உங்களுடைய பிரதமராகச் சேவையாற்றிவந்துள்ளார். அவர் அப்பொறுப்பினை மிகுந்த கடப்பாட்டுடன் ஏற்றக்கொண்டிருக்கிறார் - உங்களுக்கும், உங்கள் குடும்பங்களுக்கும், நம் நாட்டிற்கும் மிகச் சிறந்த முறையில் பங்காற்றுவதற்கு.

மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றிபெறும் எனில், எங்கள் குழுவின் முக்கிய பொறுப்பு, சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்து, நம் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, வருங்காலத்தைப் பத்திரப்படுத்துவதே ஆகும். உங்கள் வாழ்க்கை, வேலை, நலன் ஆகியவற்றோடு நாங்கள் ஒருபோதும் விளையாடமாட்டோம்.

எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் இந்தப் பொறுப்புணர்வின் தன்மை புரியும். இது உங்களுக்கான எங்கள் வாக்குறுதி, கடப்பாடு. இதுதான் எங்களுடைய மாறாத உறுதி.

“ஆக, நாங்கள் எங்கள் சக சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொள்கிறோம். மாறிவரும் இந்த உலகில், மிகச் சிறந்த அணியைத் தேர்ந்தெடுங்கள்.

‘உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் தொகுதிக்கும், நம் நாட்டிக்கும் சிறப்பாகச் சேவையாற்றமுடியும்’ என நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள அணிக்கு வாக்களியுங்கள். எல்லாவற்றையும்விட, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நேர்மையான, நல்ல பண்புடைய தலைவர்களைத் தேந்தெடுங்கள். ஏனெனில், இறுதியில் கொள்கைகள், வாக்குறுதிகள் ஆகியவற்றைக் காட்டிலும் நற்பண்பே முக்கியம்.

மக்கள் செயல் கட்சியைப் பொறுத்தமட்டில், உங்களுக்கு மிக முக்கியமாகத் திகழும் அம்சங்கள் - வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வேலைகள், உங்கள் எதிர்காலம் - குறித்து நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

நாங்கள் தொடர்ந்து உங்களோடு இணைந்து பணியாற்றுவோம் - கொள்கைகளை உருவாக்கும்போது, உங்களைக் கேட்டறிவோம்; பரவலாகக் கலந்தாலோசிப்போம். எங்களால் எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு முடியாத பட்சத்தில், அவற்றுக்கான காரணங்களை விளக்கிக் கூறுவோம். இன்றைய கொள்கைகள் ஒவ்வொன்றும், பலதரப்பட்ட சிங்கப்பூரர்களின் எண்ணங்களையும் அக்கறைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டவை. வருங்காலத்தில், நாம் முன்னேறிச் செல்லும் பாதையை வடிவமைப்பதில், உங்களில் அதிகமானோரை ஓடுபடுத்த நாங்கள் மேலும் செயலாற்றுவோம்.

நம் தேசத்தின் ஒவ்வோரு அத்தியாத்திலும், மக்கள் செயல் கட்சி உங்களுடன் துணை நின்றுள்ளது. முன்னோடி, மெர்டேக்கா, மாஜுலா தலைமுறையினரோடு ஒன்றிணைந்து, நாம் நிலையான, ஒற்றுமை மிகுந்த சிங்கப்பூரை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் மேம்பட்ட வாழ்க்கையை உருவாக்கியுள்ளோம்.

பிரச்சினைகளும் நிச்சயமற்ற சூழலும் நிறைந்த மற்றுமொரு காலகட்டத்தில், நாம் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், நீங்கள் மீண்டும் மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம் - சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்ல. 2008 உலக நிதி நெருக்கடியின்போது, நாங்கள் அவ்வாறே செய்தோம். மீண்டும் பெருந்தொற்றின்போது, கடந்த தவணைக்காலத்தில் அதனையே செய்திட்டோம். உங்கள் ஆதரவுடன் மீண்டும் அவ்வாறே செய்வோம் - எத்தகைய நிச்சயமற்ற சூழ்ந்தால் எழுந்தாலும்கூட.

“இந்தத் தேர்தலில், உங்களுக்குச் சிறப்பாக சேவையாற்றும் வாய்ப்பை எங்களுக்கு அளித்திட உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

“மாறிவரும் இந்த உலகில், மக்கள் செயல் கட்சி அணி, மாறாத உறுதியுடன் உங்களுக்கான மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்திட, எங்களால் ஆன அனைத்தையும் செய்வோம்,” என்று டாக்டர் ஹமீது தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்