பயணிகள் புறப்பாட்டு நுழைவாயில் முன்கூட்டியே மூடப்படும்: கெத்தே பசிபிக்

பயணிகள் புறப்பாட்டு நுழைவாயில் முன்கூட்டியே மூடப்படும்: கெத்தே பசிபிக்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

14 May 2026 - 7:52 pm

1 mins read

கெத்தே பசிபிக் விமானங்களில் பயணம் செய்வோர் ஜூன் 1 முதல் சற்று முன்கூட்டியே பயணிகள் புறப்பாட்டு நுழைவாயிலுக்குச் செல்லவேண்டும்.

அனைத்து விமானங்களும் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நுழைவாயில்கள் மூடப்படும் என்று கெத்தே பசிபிக் கூறியது.

தற்போது அவை பத்து நிமிடங்களுக்கு முன்பாக மூடப்படகின்றன.

அதேவேளையில், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்குள் நுழைவதற்குப் பயணிகளுக்குக் கூடுதலாக ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்படும்.

பயணிகளுக்குச் சுமுகமான அனுபவத்தைக் கொடுப்பதற்காக அந்த ஐந்து நிமிட நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கெத்தே பசிபிக் கூறியது.

விமானம் புறப்படும் சமயத்தில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், பயணிகள் தாமதமாக வருவது அல்லது வராமல் போவது என்று அது சொன்னது.

அவ்வாறு நடக்கும்போது, பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஏற்கெனவே விமானத்தில் ஏற்றப்பட்ட அவர்களின் பயணப்பெட்டிகளை மீண்டும் வெளியே எடுக்க வேண்டியிருக்கும்.

“இது நுழைவாயிலுக்கு நேரத்தோடு செல்லும் மற்ற பயணிகளைப் பாதிக்கும்; தாமதத்தையும் ஏற்படுத்தும்,” என்று கெத்தே பசிபிக் கூறியது.

பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமானத்தில் ஏறும் நேரத்தை மிகக் கவனமாகக் கவனிக்குமாறு அது பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கெத்தே பசிபிக்பயணம்பயணிகள்