புக்கிட் கோம்பாக் நிலையத்தில் ரயிலிலிருந்து புகை கிளம்பியதால் பயணிகள் வெளியேற்றம்

புக்கிட் கோம்பாக் நிலையத்தில் ரயிலிலிருந்து புகை கிளம்பியதால் பயணிகள் வெளியேற்றம்

1 mins read
ரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்கின
fc165838-f066-4f17-add2-64aa62666644
புக்கிட் கோம்பாக் நிலையத் தளமேடையில் புகை பரவியதால், பயணிகள் சிலர் மூக்குகளை மூடிக்கொண்டு இருப்பதைக் காணொளி ஒன்று காட்டியது. - படங்கள்: சைமன் டே/ஃபேஸ்புக்

புக்கிட் கோம்பாக் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலுக்கு அடியிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) காலை புகை வெளியேறியதை அடுத்து, அந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு-தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ள அந்த நிலையத்தில் காலை 11.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக எஸ்எம்ஆர்டி டிரைன்ஸ் தலைவர் லாம் ஷியாவ் காய் தெரிவித்தார்.

அந்த ரயிலின் பிரேக் பழுதுபட்டதன் காரணமாக புகை வெளிவந்திருக்கலாம் என்று முதற்கட்ட சோதனையில் தெரியவந்ததாக திரு லாம் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் அனைவரையும் ரயிலிலிருந்து எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதில் பயணிகள் யாருக்கும் மருத்துவ உதவி தேவைப்படவில்லை என்றார் திரு லாம்.

அதனைத் தொடர்ந்து, அந்த ரயில் கூடுதல் பரிசோதனைக்காக பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரயில் சேவைகள் தொடர்ந்து வழக்கம்போல் இயங்கின.

இச்சம்பவத்தின்போது புக்கிட் கோம்பாக் நிலையத் தளமேடையில் புகை பரவியதால், பயணிகள் சிலர் தங்கள் மூக்குகளை மூடிக்கொண்டு இருப்பதைக் காணொளி ஒன்று காட்டியது.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டிரயில்புகை