தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் பால் தம்பையா தோல்வி

1 mins read
7127c6e8-8489-4798-81c8-6fee45d7110f
புக்கிட் பாஞ்சாங்கில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திரு தம்பையா 38.59% வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர், பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா மாதிரி வாக்குகள் கணக்கெடுப்பில் 38.59% பெற்றுள்ளார்.

இதன்படி பால் தம்பையா தோல்வி அடைந்துள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர் லியாங் எக் ஹுவா 61.41% பெற்றுள்ளார்.

புக்கிட் பாஞ்சாங்கில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திரு தம்பையா 2020ல் அத்தொகுதியில் 46.26% வாக்குகளை பெற்றிருந்தார்.

“ஏமாற்றம்தான், ஆனால் ஆச்சரியம் இல்லை,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு தம்பையா.

இந்நிலையில் தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தமது உளமார்ந்த நன்றியை திரு தம்பையா தெரிவித்துக் கொண்டார்.

“எதிர்காலத்தில் சிங்கப்பூரர்கள் பயத்துக்கு இடங்கொடுக்காமல் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்