பீஸ் சென்டரில் புத்துயிரூட்டும் சமூக ஒருங்கிணைப்பு திட்டங்கள்

1 mins read
ecc57a0c-a254-41f5-8c26-b7f54e896a34
1977ல் கட்டப்பட்ட பீஸ் சென்டர் கடைத்தொகுதி ஈராண்டுகளுக்கு முன்னர் கூட்டு விற்பனையில் ‘சிஇஎல் டிவெலப்மன்ட்’, ‘சிங்-ஹையி கிரிஸ்டல்’, ‘அல்ட்ரா இன்ஃபினிட்டி’ ஆகிய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சோஃபியா ரோட்டில் அமைந்துள்ள பீஸ் சென்டர் கடைத்தொகுதியை ஆகஸ்ட் மாதத்திற்குள் இடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1977ல் கட்டப்பட்ட பீஸ் சென்டர் கடைத்தொகுதி ஈராண்டுகளுக்கு முன்னர் கூட்டு விற்பனையில் ‘சிஇஎல் டிவெலப்மன்ட்’, ‘சிங்-ஹையி கிரிஸ்டல்’, ‘அல்ட்ரா இன்ஃபினிட்டி’ ஆகிய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது.

அதன் உரிமையாளர்கள் கடைத்தொகுதியை இடிக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளனர்.

அக்கட்டடத்தில் சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்குச் சாத்தியம் இருப்பதாக நண்பர்கள் கேரி ஹொங்கும், யுவோன் சியாவும் கூறியதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் ‘ப்ளேபேன்’ என்ற சமூக இயக்கத்தைப் பற்றி முதன் முதலில் யோசித்தனர். 400,000 சதுர அடி பரப்பளவிலான அந்தச் சில்லறை வர்த்தக இடத்தை, புத்தாக்க ஒருங்கிணைப்புகள், வர்த்தகங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான துடிப்பான விளையாட்டு மைதானமாக உருமாற்றுவதற்கான இயக்கம் அது.

‘ப்ளேபேன்’ அந்தக் கட்டடத்தை அடுத்த ஆண்டு ஜனவரி வரை, லாப நோக்கமற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்