சைனாடவுனில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர் மாண்டார்.
இந்த விபத்து அக்டோபர் 28ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
லாரி மோதியதில் அந்த 53 வயது ஆடவர் உயிரிழந்தார்.
கம்போங் பாரு சாலையை நோக்கிச் செல்லும் நியூ பிரிட்ஜ் சாலையில் விபத்து நிகழ்ந்ததாகப் பிற்பகல் 2.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் காயமடைந்த அந்த ஆடவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.