ஜூரோங் வெஸ்ட்டில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) மரம் ஒன்று விழுந்ததில் காயமுற்ற பாதசாரி ஒருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42லிருந்து மாலை 5.25 மணியளவில் உதவி கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மரம் ஒன்று சாலையில் விழுந்து கிடப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. அந்த மரத்துக்கு அருகே இருந்த போக்குவரத்து விளக்கு ஒன்றும் சேதமுற்றது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கனமழை பெய்தது.
காலை 8.15 மணியிலிருந்து பிற்பகல் 1.50 மணி வரை, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் ஏறத்தாழ 134.8 மில்லி மீட்டர் அளவிலான மழை பதிவானதாக கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை இரவு பதிவிட்டது.

