தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவப்பு விளக்கு எரிந்தபோது சாலையைக் கடந்த பாதசாரிகளுக்கு அபராதம்

1 mins read
ed552521-085e-471a-b0e9-52bc5e2362e4
சிவப்பு எரியும்போது சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு 50 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது. - படம்: யூஸ் யுவர் ரோட்சென்ஸ்/ ஃபேஸ்புக்

சிவப்பு விளக்கு எரிந்தால் என்ன என்று மனம்போன போக்கில் சாலையைக் கடந்த 24 பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சோதனையில் சிக்கிய அனைவரும் 20 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள்.

இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை நடந்த சோதனையில் 24 பாதசாரிகள் சிக்கினர்.

இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரம் கேட்டபோது, விருப்பம்போல சாலையைக் கடக்கும் பாதசாரிகள் தொடர்பான விபத்துகள் 23 விழுக்காடு அதிகரித்துள்ளதை காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.

2023ல் 288ஆக இருந்த பாதசாரிகள் தொடர்பான சம்பவங்கள் 2024ல் 353க்கு அதிகரித்தது.

மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கின் யுவர் ரோட்சென்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட படங்களில் பாதசாரிகளை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிடுவதைக் காண முடிந்தது.

சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடந்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்தது.

சிவப்பு விளக்கின்போது சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு 50 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்