பீஷான், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் மின்சிகரெட்டுகளை விநியோகித்தவர்கள் பிடிபட்டனர்.
ஜூலை 10ஆம் தேதியன்று பீஷான் ஸ்திரீட் 13ல் சுகாதார அறிவியல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
அப்போது மின்சிகரெட்டுகளை விநியோகிப்பவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் காரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அந்த சந்தேக நபர் அங்கிருந்து காரில் தப்பிக்க முயன்றார்.
ஆனால் காரின் இடது பக்க முன் கதவைத் திறந்து அதிகாரி ஒருவர் காருக்குள் குதித்தார்.
இதையடுத்து, அந்த 27 வயது ஆடவர் பிடிபட்டார்.
அந்தக் காரில் பல மின்சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டனர்.
அவற்றில் போதைப்பொருள் கலந்த பல மின்சிகரெட்டுகள் இருந்தன.
அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பிடிபட்டவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த மின்சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜூன் 23ஆம் தேதியன்று ஈசூன் அவென்யூ 6ல் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு 22 வயது பெண் பிடிபட்டார்.
அப்போது அப்பெண்ணின் மூன்று நண்பர்களும் அந்த வீட்டில் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைப் புகைத்திருந்தது தெரியவந்தது.
அந்த வீட்டில் இருந்த மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2024ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் $41 மில்லியனுக்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மின்சிகரெட் தொடர்பாக 2024ஆம் ஆண்டில் 14,600 பேர் கைது செய்யப்பட்டனர்.