மக்கள் செயல் கட்சியின் பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி வேட்பாளர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) காலையிலேயே பிரசாரத்தைத் தொடங்கினர்.
“காலையில் உடற்பயிற்சி, சந்தை, காலை உணவுக்குச் சென்ற குடியிருப்பாளர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று அத்தொகுதியில் மசெக அணிக்கு தலைமையேற்றிருக்கும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
பிற்பகலில் இன்னும் அதிக மக்களைச் சந்திக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவருடன் இருந்த சக்தியாண்டி சுபாட், மக்களுடன் கலந்துரையாடிய படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.
ஒரு குடியிருப்பாளர், உங்களுக்கு பெரிய கை என்று சக்தியாண்டி சுபாட்டிடம் ஆச்சரியத்துடன் கூறினார்.
இப்படித்தான் ‘அங்கிள்’ ஒருவர் கையைப் பற்றி கூறி எங்களுடைய நாளை சிரிப்புடன் தொடங்கி வைத்தார் என்றார் திரு சக்தியாண்டி சுபாட்.
மக்கள் செயல் கட்சியின் குழுவில் எலிசா சென், சாய்யின்சோவ் ஆகியோர் புது முகங்கள். சிங்கப்பூர் மக்கள் கட்சியை மசெக குழு எதிர்கொள்கிறது.