கொள்கை மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்த மக்கள் சக்திக் கட்சி

1 mins read
3246d352-44d3-4064-a8bf-172e13766cc1
பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுடன் மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவ கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று மக்கள் சக்திக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அக்கட்சி அதன் இரண்டாவது பிரசாரக்கூட்டத்தை சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடத்தியது.

அங் மோ கியோ குழுத் தொகுதிக்கு உட்பட்ட இயோ சூ காங் விளையாட்டரங்கத்தில் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

அடிப்படைத் தேவைகளுக்குப் பொது, சேவை வரி நீக்கப்பட வேண்டும் என்றும் மெடிசேவ் பயன்பாட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடும் மக்கள் சக்திக் கட்சி வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.

மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த பத்து பேர் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் அனைவரும் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரசாரக்கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் தலைமை தாங்கினார்.

அங் மோ கியோ குழுத் தொகுதியிலும் தெம்பனிஸ் குழுத் தொகுதியிலும் மக்கள் சக்திக் கட்சி போட்டியிடுகிறது.

குடிநுழைவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று திரு கோ தெரிவித்தார்.

தனியார் கார் வாடகை நிறுவனங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கார்கள் வாங்க நடுத்தர சிங்கப்பூரர்களுடன் இந்த நிறுவனங்கள் நேரடியாகப் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார். இதனால் கார்களின் விலை அதிகரிப்பதாக திரு கோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்