மக்கள் சக்திக் கட்சி, அதன் குழுத் தொகுதிக்கான பிரசாரப் பதாகையைத் தவறான தொகுதியில் மாட்டியிருந்தது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 330ஏ, புளோக் 307ஏ ஆகிய இடங்களில் அந்தப் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை இரண்டும், தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியில் உள்ள பகுதிகளாகும்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பிற்பகல் 2.00 மணியளவில் பதாகைகள் காணப்பட்டன.
மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் கோ மெங் செங் தலைமையிலான குழு, தெம்பனிஸ் குழுத் தொகுதியில் பலமுனைப் போட்டியை எதிர்கொள்கிறது.
அந்தத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகிய இதர கட்சிகளும் போட்டியிடுகின்றன.
தெம்பனிஸ் சங்காட்டில் மக்கள் கட்சி சார்பில் டெஸ்மண்ட் சூ, பாட்டாளிக் கட்சி சார்பில் கென்னத் ஃபூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.