நான்கு எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்த சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணியிலிருந்து மக்கள் சக்திக் கட்சி (பிபிபி) வெளியேறிவிட்டது.
மக்கள் குரல் (பிவி), சீர்திருத்தக் கட்சி (ஆர்பி), ஜனநாயக முற்போக்குக் கட்சி (டிபிபி) ஆகியவை அக்கூட்டணியில் இடம்பெற்று இருந்த இதர மூன்று கட்சிகளாகும்.
மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளரான கோ மெங் செங், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியிலிருந்து விலகியதாக பிப்ரவரி 22ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பொதுத் தேர்தலுக்கான உத்திகளில் தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியிலிருந்து மக்கள் சக்திக் கட்சி வெளியேறுவது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருத்திணக்கம் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இது, வரப்போகும் தேர்தலில் சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணி வலுவான சக்தியாகச் செயல்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது
சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணி 2023ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.