சூலியா ஸ்திரீட்டில் உள்ள ஓசிபிசி நிலையத்தின் 34ஆம் தளத்தில், இரண்டு ‘பெரகிரின் ஃபால்கன்’ பறவைகள் கூடு கட்டியுள்ளன.
பூமியிலே ஆக வேகமான பறவை அது. உணவுக்கு வேட்டையாடும்போது, அது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.
தேசிய பூங்காக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான பதிவு, கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவியல் பத்திரிக்கையான ‘நேச்சர் இன் சிங்கப்பூர்’ல் வெளியிடப்பட்டது.
ஓசிபிசி நிலையத்தில் இரண்டு முட்டைகள் காணப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூரில் ‘பெரகிரின் ஃபால்கன்’ பறவையின் இனப்பெருக்கத்தின் தொடர்பில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் அறிகுறி அது என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், அந்த முட்டைகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த முட்டைகளை மீட்க, தேசிய பூங்காக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை ஆராய்ச்சியாளர்களின் உதவியை நாடியது.
ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு கருவி ஒன்றைப் பயன்படுத்தி முட்டைகளை மீட்டன. அவை லீ கோங் சியன் அரும்பொருளகத்துக்குக் எடுத்துச் செல்லப்பட்டன.