சிங்கப்பூரில் பெட்ரோல் விலை உயர்கிறது

சிங்கப்பூரில் பெட்ரோல் விலை உயர்கிறது

2 mins read
எரிபொருள் நிறுவனங்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ‘கேஸ்’ வலியுறுத்து
4ac08ebd-140e-438d-b074-11212508da1f
சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளால் 95-ஆக்டேன் பெட்ரோல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா

பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஈரான் தாக்கப்பட்டதிலிருந்து இரண்டு வாரங்களாக சிங்கப்பூரில் உள்ள எரிபொருள் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தி வருகின்றன.

சினோபெக் அதன் 95-ஆக்டேன், 98-ஆக்டேன், பிரிமியம் பெட்ரோலின் விலைகளை முறையே $3.35, $3.85, $3.98 ஆக 4 காசு உயர்த்தியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று அண்மைய உயர்வு ஏற்பட்டுள்ளது.

டீசல் விலை 7 காசு அதிகரித்து $3.27 ஆக இருந்தது.

மத்திய கிழக்கு மோதல் நடப்பதற்கு முன்பு இருந்ததை விட இந்த விலைகள் சுமார் 8.6 விழுக்காடு அதிகம்.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் (கேஸ்) ‘பிரைஸ் காக்கி’ செயலி, எஸ்பிசி-யில் 95-ஆக்டேன் பெட்ரோல் $3.30 ஆகவும், கால்டெக்ஸ், ஷெல், எஸ்ஸோ, சினோபெக்கில் $3.35 ஆகவும் இருந்ததைக் காட்டியது.

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளால் 95-ஆக்டேன் பெட்ரோல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் அனைத்து தரங்களுக்கும் விலை திருத்தங்கள் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் நிகழ்ந்து வருகின்றன. கடந்த இரண்டு நாள்களில் 95-ஆக்டேன் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 4 காசு முதல் 30 காசு வரை அதிகரித்துள்ளது.

தற்போதைய விலையேற்றத்தின்படி, சினோபெக்: $3.05லிருந்து $3.35 வரை, எஸ்பிசி: $3.14லிருந்து $3.30 வரை, ஷெல்: $3.31லிருந்து $3.35 வரை, எஸ்ஸோ: $3.31லிருந்து $3.35 வரை, கால்டெக்ஸ்: $3.15லிருந்து $3.35 வரை உள்ளது.

‘கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும்’

மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் (கேஸ்) தலைவர் மெல்வின் யோங், “மார்ச் 11 அன்று, பயனீட்டாளர் கண்காணிப்பு அமைப்பு எரிபொருள் நிலைய விலைகளில் ஏற்பட்ட அண்மைய அதிகரிப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது,” என்று கூறினார்.

“உலகளவில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்து வருவதால், எரிபொருள் நிறுவனங்கள் முன்கூட்டியே விலைகளை உயர்த்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று திரு யோங் வலியுறுத்தினார்.

வாகன உரிமையாளர்கள் பிரைஸ் காக்கி செயலியில் அண்மைய எரிபொருள் விலைகளைச் சரிபார்க்கலாம் என்று திரு யோங் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்