மூன்றாம் கட்டத் தளர்விலிருந்து வெளிவருவது இப்போதைக்கு இல்லை

மூன்­றாம் கட்­டத் தளர்வு நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் இப்­போ­தைக்கு வெளி­யே­றும் என எதிர்­பார்க்க முடி­யாது என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தெரி­வித்­துள்­ளார்.

“எதிர்­கா­லத்­தில் ஏற்­படும் உத்­தேச கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்கு தடுப்­பூ­சி­க­ளால் முடி­யும் என்ற வலு­வான ஆதா­ரம் கிடைக்­கும் வரை மூன்­றாம் கட்­டத் தளர்வு என்­பது இப்­போ­தைக்கு ‘புதிய வழக்­க­மாக’ நீடிக்­கும்.

“மேலும் நம் நாட்­டின் மக்­கள் தொகை­யில் குறிப்­பிட்ட எண்­ணிக்கையினர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும். உலக நாடுகளில் கொரோனா கிரு­மித்­தொற்று கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டி­ருக்க வேண்­டும்,” என்­றும் டாக்­டர் ஜனில் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கி­னார்.

“கொரோனா கிரு­மி­யின் வீரி­யம் சிங்­கப்­பூ­ரி­லும் உல­கம் முழு­வ­தி­லும் இன்­னும் தொடர்­கிறது. இங்கு பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கும் தடுப்­பூ­சி­கள் நம்­மைப் பாது­காக்­கும் ஆற்­றல் பெற்­றுள்­ளன என்ற நம்­பிக்­கையை நமக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது எதிர்­கால கிரு­மிப் பர­வ­லை­யும் தடுக்­கும் ஆற்­றல் பெற்­றுள்­ளது என்று கூறும் சான்றுக­ளுக்கு அமைப்­பு­கள் காத்­தி­ருக்­கின்­றன.

“அதனை அடைய மிகச் சிறந்த உத்தியாக, உரு­மா­றும் கொரோனா கிரு­மிக்கு எதி­ரான ஆற்­றல்­க­ளை­யும் நாங்­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றோம். இதற்­கிடையே, பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைக் கட்­டொ­ழுங்­கு­டன் கடைப்­பி­டித்­தல், நமது மக்­கள் தொகை­யில் உயர்ந்த எண்­ணிக்­கை­யி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளுதல், நமது ஒட்­டு­மொத்த எதிர்ப்புச் சக்­தி­யைப் பலப்­ப­டுத்­து­தல் ஆகி­யவையே தற்போது சிறந்த வழி,” என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

இயோ சூ காங் தனித்­தொ­குதி உறுப்­பி­னர் திரு யிப் ஹோன் வெங் கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்துப் பேசிய டாக்­டர் ஜனில், “மூன்­றாம் கட்ட தள­ர்வின்­போ­தும், தொடர்­பில்­லாத சம்­ப­வங்­கள், சமூ­கக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் ஆகி­ய­வற்­றால் சிங்­கப்­பூர் தனது பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைக் கடு­மை­யாக்கி உள்­ளது.

“பொரு­ளி­ய­லும் சமூ­க­மும் மீண்­டும் பாது­காப்­பாகத் திறப்­ப­தற்கு அர­சாங்­கம் தொடர்ந்து அதற்கான வழி­களை ஆரா­யும். ஆனால், இங்­கும் உல­கெங்­கி­லும் நில­வும் மாறி­வ­ரும் சூழ­லால் நாம் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை அவ்­வப்­போது மாற்­றிக்­கொண்­டி­ருக்க வேண்­டும்,” என்­றார்.

ஒரு­வேளை சீனா­வின் ‘சினோ­வெக்’ தடுப்­பூசி சிங்­கப்­பூ­ருக்கு வந்து, அது பயன்­பாட்­டுக்கு அனு­மதிக்­கப்­பட்­டால், அது நாட்­டின் தடுப்­பூசி போடும் திட்­டத்தை மேலும் துரி­த­மாக்­கும் சாத்­தி­யம் உள்­ளதா என்று திரு யிப் வின­வினார்.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், “தடுப்­பூசி திட்­டத்தை துரி­த­மாக்­கு­தல் பல்­வேறு அம்­சங்­க­ளைப் பொறுத்­துள்­ளது. அதில் மிக முகக்­கி­ய­மா­னது, தடுப்­பூசி மருந்­தின் கொள்­ள­ளவை போது­மான அள­வுக்கு கைய­கப்­ப­டுத்­து­தல், தடுப்­பூ­சியை மக்­க­ளுக்கு செலுத்த போது­மான எண்­ணிக்­கை­யில் தடுப்­பூசி நிலை­யங்­களை உரு­வாக்­கு­தல், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மக்­கள் முன்­வ­ரு­தல், தடுப்­பூ­சி­யின் விநி­யோ­கம் ஆகி­யவை இதர அம்­சங்­கள்,” என்­றார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யின் செங்­காங் குழுத் தொகுதி உறுப்­பி­னர் டாக்டர் ஜேமஸ் லிம், கிரு­மி­யில் உரு­மாற்­றம் அதி­க­ரித்­தால் அதனை எதிர்­கொள்ள சுகா­தார அமைச்சு எப்­படிப்­பட்ட திட்­டங்­களை வைத்­துள்­ளது என்று கேட்­டார்.

“கிரு­மித்­ தொற்­றைத் தவிர்க்­கும் அணுகு­மு­றை­களில் சிங்­கப்­பூ­ருக்கு பொது­வான அடிப்­படை நடை­ மு­றை­கள் உள்­ளன. அப்­ப­டிப்­பட்ட நிலைமை வரும்­போது அதை முறை யாக எதிர்­கொள்­வோம். பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள், தொடர்­புத் தட­மறி­தல், தனி­மைப்­படுத்­தல் ஆகி­யவை அவற்­றுள் அடங்­கும்,” என்­றும் டாக்டர் ஜனில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!