ஆண்டிறுதியில் மூன்றாம் கட்டத் தளர்வுகள்

எட்டுப் பேர் வரை ஒரு குழுவில் இடம்பெறவும் வீடுகளில் வரவேற்கவும் அனுமதிக்கப்படலாம் .

சமூ­கத்­தில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து குறை­வாக இருக்­கும் பட்­சத்­தில் இவ்­வாண்டு இறு­தியில் சிங்­கப்­பூ­ரில் மூன்­றாம் கட்­டத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­ப­ட­லாம் என்று கொவிட்-19 தொற்­றுக்­கு எ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு தெரி­வித்­துள்­ளது.

அப்­படி மூன்­றாம் கட்­டத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­படும் பட்­சத்­தில், வீடு­க­ளுக்கு வெளியே ஒன்­று­கூடும் குழுக்­களில் இடம்­பெ­று­வோ­ரின் எண்­ணிக்கை ஐந்­தில் இருந்து எட்­டாக அதி­க­ரிக்­கப்­ப­ட­லாம். அதே­போல், வீடு­க­ளி­லும் எட்­டுப் பேர் வரை வர­வேற்க அனு­ம­திக்­கப்­ப­ட­லாம். அத்­து­டன், அரும்­பொ­ரு­ள­கம், வழி­பாட்­டுத் தலங்­கள், திரு­மண வர­வேற்பு போன்­ற­வற்­றி­லும் அதி­க­மா­னோர் அனு­ம­திக்­கப்­ப­ட­லாம். ஆனா­லும் மூன்­றாம் கட்­டத் திறப்­பில் அடி­யெ­டுத்து வைப்­ப­தற்கு, கொரோ­னா­விற்கு எதி­ரான தனது பிடியை சிங்­கப்­பூர் தொடர்ந்­திட வேண்­டும் என்­றும் பல முக்கிய நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட வேண்­டும் என்­றும் பணிக்­குழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரும் கல்வி அமைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங் கூறி­னார்.

முத­லா­வ­தாக, சிறிய அள­விலான குழுக்­கள், பாது­காப்பு இடை­வெளி, சமூ­கப் பொறுப்­பு­டன் இருத்­தல் உள்­ளிட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை சிங்கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து கடைப்­பி­டிக்க வேண்­டும். அடுத்­த­தாக, அதி­க­மான நட­வடிக்­கை­களை மீண்­டும் தொடங்க அனு­ம­திக்க ஏது­வாக பெரிய அள­வில் கொரோனா தொற்­றுப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படும். முதற்­கட்­ட­மாக, நிகழ்ச்­சி­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­முன் பங்­கேற்­பாளர்­களைக் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னைக்கு உட்­படுத்தும் முன்­னோட்ட முயற்சி இடம்­பெ­றும்.

குறை­வான துல்­லி­யத்­தன்மை கொண்ட விரை­வுப் பரி­சோ­தனை முறை­கள் அத்­த­கைய நிகழ்­வு­களில் பயன்­ப­டுத்­தப்­படும். அந்த முன்­னோட்ட முயற்சி வெற்­றி பெற்றால், அது மேலும் மெரு­கூட்­டப்­பட்டு விரி­வு­ப­டுத்­தப்­படும். உள்­ளூ­ரி­லும் உல­க­ள­வி­லும் நிலவும் சூழலைப் பொறுத்து, இந்த நட­வ­டிக்­கை­கள் படிப்­ப­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று பணிக்­கு­ழு­வின் இன்­னொரு இணைத்­த­லை­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான கான் கிம் யோங் கூறி­னார்.

இருப்பினும், மதுக்­கூ­டங்­கள், கரவோக்கே நிலை­யங்­கள், இரவு நேரக் கேளிக்கை விடு­தி­கள் போன்­றவை கிரு­மித்­தொற்று அபா­யம் அதி­க­முள்ள பகு­தி­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன. ஆகை­யால், மூன்­றாம் கட்­டத் தளர்வுகளின் தொடக்­கத்­தில் அவை மூடப்­பட்­டு இ­ருக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் இப்­போ­தைய கிரு­மித்­தொற்­றுச் சூழல், முழு­தும் அணைந்­து­வி­டாத தீயைப் போல, நீறு பூத்த நெருப்­பாக இருப்­ப­தாக அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார். ஒவ்­வொரு விதித் தளர்­வும் அதற்கு எண்­ணெய் இடு­வது போன்­றது என்­றும் அத­னால் கிரு­மிப் பர­வலை அதி­க­ரிக்­கும் அபா­யம் உள்­ளது என்­றும் அவர் சொன்­னார். கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்­தும்­போது, பரி­சோ­த­னை­கள், தட­மறிதலை அதி­கப்­ப­டுத்­து­வது எனக் கூடு­தல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை­யும் மேற்­கொள்­வது முக்­கி­யம் என்­றார் திரு கான்.

“எப்­போது இந்த நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என்­பதே பெரிய கேள்வி. உண்மையில் அது நம் அனை­வ­ரின் நட­வ­டிக்­கை­க­ளை­யும் பொறுத்தே உள்ளது என்­பதே அதற்­கான விடை,” என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் தோன்­றி­னால், மூன்­றாம் கட்­டத் தளர்வு தள்­ளிப்­போ­க­லாம் என்­றும் அவர் சொன்­னார். உல­கின் பல நாடு­க­ளி­லும் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால் அதற்­கெ­தி­ரான போர் இப்­போ­தைக்கு ஓயாது என்­றார் அவர். சிங்­கப்­பூ­ரில் மூன்­றாம் கட்­டத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­ப­டு­வது வெற்­றிக்­கான பிர­க­ட­னம் இல்லை என்றும் அது ஒரு மைல்­கல் என்­றும் அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

டிரேஸ்டுகெதர் கட்டாயமாகிறது

இவ்வாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், உணவகங்கள், வேலையிடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள் என பலரும் வந்து செல்லும் இடங்கள் அனைத்திலும் டிரேஸ்டுகெதர் செயலி அல்லது வில்லையைப் பயன்படுத்தி நுழைவது கட்டாயமாக்கப்படும். அதன் பின் கைபேசியைக் கொண்டு சேஃப்என்ட்ரி கியூஆர் குறியீட்டை அல்லது அடையாள அட்டையில் உள்ள பட்டைக் குறியீட்டை வருடுவதன் மூலம் அல்லது சிங்பாஸ் கைபேசிச் செயலி மூலம் அவ்விடங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப் படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon