அக்டோபர் 14 முதல், தயார்நிலையில் உள்ள தேசிய சேவையாளர்கள், ஆண்டுதோறும் மேற்கொள்ள கடமைப்பட்டுள்ள தேர்வுகளையும் பயிற்சிகளையும் புதிய வளாகத்தில் இவற்றைச் செய்யவேண்டும்.
மாஜு முகாமிற்குப் பதிலாக, ‘சிஎம்பிபி’ எனப்படும் புதிய மத்திய மனிதவளத் தளத்திற்குத் தேசிய சேவையாளர்கள் செல்லவேண்டிவரும்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) பிற்பகல் 2 மணிக்கு இந்த அறிவிப்பு, ஒன்என்எஸ் இணையச் செயலியிலும் தேசிய சேவை இணையத்தளத்திலும் வெளிவந்தது.
தனிநபர் உடலுறுதிச் சோதனை (ஐபிபிடி), தேசிய சேவை உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சி (எஃப்ஐடி) ஆகியவை, கிளமெண்டி ரோட்டிலுள்ள 39 மாஜூ டிரைவில் இனிமேல் நடத்தப்படமாட்டா.
புதிய பயிற்சியிடத்தில் எல்லாவித வானிலைக்கும் பொருத்தமான 300 மீட்டர் ஓட்டத்தடமும் அடங்கும் என்று இதனைப் பற்றிய அறிவிப்பு குறிப்பிட்டது.
கேஷியூ எம்ஆர்டி நிலையத்திற்கு எதிரே உள்ள ஹில்வியூ லிங்கில் தற்போதுள்ள புதிய மத்திய மனிதவளத் தளத்திற்கு அக்டோபர் 14 முதலான முன்பதிவுகள், தானாக மாற்றப்படும்.
ஜூன் முதல் வருகையாளர்களுக்குத் தனது கதவுகளைத் திறந்த புதிய வளாகம், டெப்போ ரோட்டிலுள்ள பழைய வளாகத்திற்குப் பதிலாகச் செயல்படும். 1991 முதல் மாஜூ வளாகம், தயார்நிலையிலுள்ள தேசிய சேவையளார்கள் தங்களது ஐபிபிடியை நிறைவேற்றுவதற்கான இடமாக உள்ளது.
தேசிய சேவைக்கான மேலாண்மை மையமாகத் திகழும் நிலையம், செப்டம்பரில் பொதுமக்களுக்குத் திறந்துவைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
700 இருக்கைகள் கொண்ட உணவங்காடி நிலையம், பிள்ளைப் பராமரிப்பு நிலையம், காற்பந்துத் திடல், உடற்கட்டு வட்டாரம் உள்ளிட்ட வசதிகளை இந்த வளாகம் கொண்டிருக்கும்.

