காவலர்களைக் கண்டதும் காரைப் பின்னால் ஓட்டிய மருத்துவர்

காவலர்களைக் கண்டதும் காரைப் பின்னால் ஓட்டிய மருத்துவர்

2 mins read
1c3a7774-cc86-4fbf-b8fa-56c4d1bdb114
பிப்ரவரி 28ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்த ஓ ஷென் லியோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நண்பர்களுடன் இரவு நேர விருந்தை முடித்துக் கொண்டு நண்பரின் காரை அவரது வீட்டுக்கு ஓட்டிச் சென்ற மருத்துவர், காவலர்களைக் கண்டதும் காரை பின்னால் செலுத்த முயன்றார்.

காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, தாம் ஒரு விரிவுரையாளர் என்றும் அவர் பொய் கூறினார்.

வெள்ளிக்கிழமை ஓ ஷென் லியோங், 36, என்ற அந்த மருத்துவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

சாலைத் தடுப்புகளைக் கண்டதும் காரை நிறுத்தத் தவறியது, மற்ற வாகனமோட்டிகளை கவனத்தில் கொள்ளாமல் காரை செலுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

தவறான தகவல் கொடுத்த மற்றொரு குற்றச்சாட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

நீதிமன்ற விசாரணையின்போது பேசிய அரசாங்க துணை வழக்கறிஞர் ஏரியல் டான், 2023 செப்டம்பர் 8ஆம் தேதி சிவ் எனும் பெண்ணுடனும் லோ எனும் ஆண் நண்பருடனும் ஓ இரவு உணவு சாப்பிடச் சென்றார்.

ஒரு குவளை ஒயின் குடித்ததும் மூவரும் கிளார்க் கீயில் உள்ள கேப்பிட்டல் ஸுக் மதுபானக் கூடத்திற்குச் செல்ல முடிவு செய்தனர்.

ஆனால் பின்னர் சிவ்வின் காரை அவரது வீட்டுக்கு ஓ ஓட்டிச் சென்றார். லோ பின்னால் உட்கார்ந்திருந்தார்.

தஞ்சோங் காத்தோங் சாலை சவுத் வழியாக வெளியேறியபோதுதான் காவலர்கள் போட்டிருந்த தடுப்புகளைக் கண்டு ஓ பின் வாங்கினார்.

மதுபானம் குடித்திருந்த ஓ காவல்துறையிடம் சிக்க விரும்பாததால் காரை பின்னோக்கி செலுத்தியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்