தீவு விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஜூன் 13) காலை டிரக்-லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் டிரக் வாகன ஓட்டுநர் காயமுற்றார்.
துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2 வெளிச்சாலைக்கு முன்பு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 10.50 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
டிரக் வாகனத்தை ஓட்டிய 56 வயது ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். லாரியை ஓட்டிச் சென்ற 58 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
விபத்துக்குப் பிந்திய நிலவரத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. டிரக் வாகனத்தின் முன் இடது சக்கரம், சாலைத் தடுப்பின் மீது ஏறி நின்றது.
விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு அருகே போக்குவரத்துக் கூம்புகளும் சிதைவுகளும் சிதறிக் கிடந்தன.