நலமாக மூப்படைவதற்கான முன்னோடித் திட்டங்கள் மேற்குப் பகுதியில் விரிவாக்கம்

நலமாக மூப்படைவதற்கான முன்னோடித் திட்டங்கள் மேற்குப் பகுதியில் விரிவாக்கம்

2 mins read
110b6e5b-224c-4835-9494-6c634616b052
கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடது) வெஸ்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற ‘ஹெல்த் டுகெதர்’ விழாவில் தொண்டூழியர்களுடன் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு லியோங் காங் சுவென் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கப்பல் பொறியாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சுறுசுறுப்பாக இருப்பதற்கும் தமது உடல்நலத்தைக் கட்டிக்காப்பதற்கும் சிரமப்பட்டார்.

ஆனால், இப்போது 84 வயதாகும் அவர், தமது அந்திமக் காலத்தை முழுமையாக அனுபவித்து வருகிறார். தமது நண்பர்களைச் சந்திப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் சைக்கிளோட்டிச் செல்வதுடன், பல்வேறு உடற்பயிற்சிகளிலும் அவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்.

வெஸ்ட் கோஸ்ட்டில் உள்ள ‘சாஸ்கோ’ (SASCO) துடிப்புடன் மூப்படையும் நிலையத்தால் தொடங்கப்பட்ட ‘புரோஸ் இன்ட்ரஸ்ட் குரூப்’ (Bros Interest Group) என்ற திட்டத்தில் அவர் சேர்ந்த பிறகு, அந்த மாற்றம் ஏற்பட்டது.

வயதானவர்கள், குறிப்பாக ஆண்கள், தங்களுக்கு வசதியான சூழலில், பொதுவான நடவடிக்கைகளில் ஒன்றுகூடுவதற்கு அந்தத் திட்டம் வழிவகுக்கிறது.

சுகாதாரப் பராமரிப்பையும் சமூக ஆதரவையும் மூத்தோரிடம் நேரடியாகக் கொண்டுசெல்லும் திட்டத்தால் பூன் லே, வெஸ்ட் கோஸ்ட் பகுதிகளில் பயனடைந்த ஏறக்குறைய 3,000 மூத்தோரில் அவரும் ஒருவர்.

2024ஆம் ஆண்டில் முதன்முதலில் பூன் லே பகுதியில் தொடங்கப்பட்ட ‘ஆரோக்கியமான வட்டாரம்’ (Healthy Precinct) எனும் அந்த முன்னோடித் திட்டம், தற்போது சிங்கப்பூரின் மேற்கில் உள்ள அக்கம்பக்கப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பும் பல்வேறு சமூகப் பங்காளிகளும் வழிநடத்தும் அந்தத் திட்டம், மூத்தோர் தங்கள் அக்கம்பக்கங்களில் வசிப்பது, நடமாடுவது, இணைந்து செயல்படுவது குறித்து மறுஆய்வு செய்கிறது.

துடிப்புடன் மூப்படையவும் சமூகத்துடன் பிணைப்போடு இருக்கவும் தங்கள் சமூகங்களிலேயே பராமரிக்கப்படவும் மூத்தோருக்கு உதவும் நோக்கில், 2023ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி (Age Well SG) செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த முன்னோடித் திட்டம் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்