அண்டை வீட்டுக்காரருக்கு $10,000 இழப்பீடு வழங்க ஆடவருக்கு உத்தரவு

அண்டை வீட்டுக்காரருக்கு $10,000 இழப்பீடு வழங்க ஆடவருக்கு உத்தரவு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jun 2026 - 4:49 pm

1 mins read

ஆடவர் ஒருவர் தான் தாக்கப்பட்டதாக அண்டை வீட்டுக்காரர்மீது வழக்கு தொடுத்து இழப்பீடாக $40,000 கோரியிருந்தார்.

ஆனால், இறுதியில் அவர்தான் அண்டை வீட்டுக்காரருக்கு $10,000 தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

திரு மா கியெட் செங், பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 633ல் வசித்துவருகிறார். அண்டை வீட்டுக்காரரும் அதே தாழ்வாரத்தில் உள்ள இன்னொரு வீட்டில் வசிக்கிறார்.

தாம் தாக்கப்பட்டதாகக் கூறி $20,000, தொந்தரவுக்கு ஆளானதாக $10,000, மூன்று சம்பவங்களால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி அவற்றுக்கு மொத்தமாக $10,000 இழப்பீடு வழங்க அவர் கோரியிருந்தார். அந்த மூன்று சம்பவங்களும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் 2025 மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தன.

அச்சம்பவங்கள் குறித்து திரு மாவும் அண்டை வீட்டுக்காரரும் அவரவர் பார்வையில் விவரித்தனர். தாம் தாக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் திரு மாவால் நிரூபிக்க முடியவில்லை என்பதை நீதிபதி அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, திரு மா 10,000 வெள்ளி அண்டை வீட்டுக்காரருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்