$160 மில்லியன் செலவில் பொலிவடைகிறது பிளாசா சிங்கப்பூரா

$160 மில்லியன் செலவில் பொலிவடைகிறது பிளாசா சிங்கப்பூரா

1 mins read
2223daed-7537-43e4-8aa1-2e793a28bb10
மேம்பாட்டுக்குப் பின்னர் பிளாசா கடைத்தொகுதியின் தோற்றத்தை விளக்கும் படம். - படம்: சிஐசிடி

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதி, அதனுடன் இணைந்துள்ள ‘த ஏட்ரியம்@ஆர்ச்சர்ட்’ சில்லறை வர்த்தகப் பகுதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக 160 மில்லியன் வெள்ளியை கேப்பிட்டாலேண்ட் ஒருங்கிணைந்த வர்த்தக அறநிறுவனம் (சிஐசிடி) முதலீடு செய்ய உள்ளது.

மேம்பாட்டுப் பணிகளை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி, 2028ஆம் ஆண்டின் நாலாம் காலாண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அந்த அறநிறுவனம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வெளியிட்ட தனது முதலாம் காலாண்டு வர்த்தக நிலவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையிலான பொலிவு ஆகியன மூலம் பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியின் தரத்தை உயர்த்துவதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று அது கூறியது.

கடைத்தொகுதிக்குள் அமைந்துள்ள இணைப்புப் பாலங்கள், புதிய உணவுக்கூடங்களை மையமாகக் கொண்டு மிதக்கும் தோட்டங்களாக உருமாற்றப்படவுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்