60 செல்லப் பிராணிகளைக் கடத்தி கூண்டுகளில் அடைத்து வைத்ததாக ஆடவர்மீது 124 குற்றச்சாட்டுகள்

60 செல்லப் பிராணிகளைக் கடத்தி கூண்டுகளில் அடைத்து வைத்ததாக ஆடவர்மீது 124 குற்றச்சாட்டுகள்

1 mins read
cc79e5c0-18db-4d94-bb6d-9eeaa29f8519
முறையான உரிமமின்றி விலங்குகளை அடைத்து வைத்திருந்ததாக ஹோ சூன் வெய்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அறுபது விலங்குகளை கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றைத் துன்புறுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 43 வயது ஆடவர் ஒருவர்மீது வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நீதிமன்றத்தில் 120க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 53 நாய்களும் ஏழு பூனைகளும் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை ஹோ சூன் வெய் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த விலங்குகள் காற்றோட்டம் இல்லாத நெரிசலான கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

அத்துடன், 2024 அக்டோபர் 24ஆம் தேதி, 453ஏ கேலாங் ரோடு முகவரியில் முறையான உரிமமின்றி அந்த விலங்குகளை அடைத்து வைத்திருந்ததாகவும் ஹோமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஹோ தமது தரப்பு விளக்கத்தை அளிக்கவில்லை. அவரது வழக்கு மே 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனையில், 2022 டிசம்பரில் கேலாங் ரோட்டில் உள்ள அந்த முகவரியில் செல்லப் பிராணிகளைப் பராமரிக்கும் கடை ஒன்றை ஹோ பதிவுசெய்திருந்தது தெரியவந்தது. இருப்பினும், அந்த நிறுவனம் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின்படி, 2024 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், முறையான உரிமமின்றி மலேசியாவிலிருந்து 53 நாய்களையும் ஏழு பூனைகளையும் சிங்கப்பூரில் இறக்குமதி செய்ய ஆடவர் இருவருக்கு ஹோ உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விலங்குகள் சட்டவிரோதமாகச் சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்டு, பின்னர் விநியோக ஊழியர்கள் மூலம் கேலாங் ரோடு முகவரிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அங்கு அவை விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்