தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகஸ்ட் 20-ல் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை

1 mins read
01e81021-1815-43b4-aef1-4e6e89bc45e2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிரதமர் லீ சியன் லூங் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையை

அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மத்திய வளாகம்) நிகழ்த்தவுள்ளார்.

இத்தகவலை பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

கடந்த ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் ஆண்களுக்கு இடையிலான பாலுறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377A சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுவதை பிரதமர் லீ அறிவித்தார்.

உட்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்பது குறித்தும் வட்டார அளவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், பொருளியல் சவால்கள் குறித்தும் அவர் பேசினார்.

சாங்கி விமான நிலைய ஐந்தாவது முனையம் , துவாஸ் துறைமுக மேம்பாடுகள் குறித்தும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்