நியூயார்க் நகருக்கு பிரதமர் லீ அதிகாரத்துவப் பயணம்

நியூயார்க் நகருக்கு பிரதமர் லீ அதிகாரத்துவப் பயணம்

1 mins read
d51bdc6a-7a56-4553-95ee-2f9a564cdc5f
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 30வது ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார். - படம்: ஏஎஃப்பி

பிரதமர் லீ சியன் லூங் நான்கு நாள் அதிகாரத்துவ பயணமாக நியூயார்க் நகருக்குச் செல்கிறார்.

பிரதமர் அலுவலகம் ஜனவரி 23ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 24 முதல் ஜனவரி 27ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில் பிரதமர் லீயுடன் அவரின் மனைவி திருமதி லீ, பிரதமர் அலுவலக மற்றும் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் ஆகியோரும் செல்கின்றனர்.

இதற்கிடையே, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிக பிரதமராக இருப்பார்.

பிரதமர் லீ இதற்கு முன் 2023 நவம்பர் மாதம் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.

அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 30வது ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

அந்தப் பயணத்தின்போது கலிஃபோர்னிய ஆளுநர் கெவின் நியூசம், முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத் தலைவர்கள் ஆகியோரை திரு லீ சந்தித்தார்.

குறிப்புச் சொற்கள்