பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தைப்பூச நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் தமிழில், “இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆங்கிலத்தில் இந்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துகள் என்று திரு வோங் கூறியுள்ளார்.
மேலும், “தைப்பூசம் பக்தி, நோன்பு, நன்றியுணர்வு ஆகியவற்றுக்கான நேரம். முருகப் பெருமானின் நல்லாசிகளையும் வாழ்க்கைச் சவால்களை வெல்வதற்கான துணிவையும் கொண்டாடும் நேரம் இது. காவடி ஏந்துதல், பால்குடம் சுமத்தல், சேவை நடவடிக்கைகள் என நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையுமே இந்த நிகழ்ச்சியை ஆழமான பொருள்கொண்டதாய் விளங்க வைக்கின்றன,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மனநிறைவு அளிக்கும் வகையில், அன்புக்குரியவர்களுடன் தைப்பூசத்தைக் கொண்டாட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

