மத்திய கிழக்குப் பூசல் குறித்து புருணை சுல்தானிடம் பேசிய பிரதமர்

மத்திய கிழக்குப் பூசல் குறித்து புருணை சுல்தானிடம் பேசிய பிரதமர்

1 mins read
376d0201-e247-4e26-9c06-03b4d4a69fa9
புருணை சுல்தானுடன் பேசியதை ஃபேஸ்புக்கில் தெரிவித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: லாரன்ஸ் வோங் / ஃபேஸ்புக்

புருணை சுல்தான் ஹாஜி ஹசானால் பொல்கியாவுடம் தாம் பேசியதாக பிரதமர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

சுல்தானுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டதாகவும் மோசமடைந்துவரும் மத்திய கிழக்குப் பூசல் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகவும் திரு வோங் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே சிறப்பான உறவு இருப்பதாகக் கூறிய பிரதமர், கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தின்போது இருநாடுகளும் தோளோடுதோள் நின்றன. குறிப்பாக முக்கிய மருத்துவப் பொருள்களும் தடுப்பூசிகளும் தேவைப்படும் தரப்புகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்வதில் இருநாடுகளும் ஒத்துழைத்தன என்றார் அவர்.

தற்போது நிலவும் சவால்களுக்கு மத்தியில் இருநாடுகளும் எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விநியோகச் சங்கிலி மீள்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

நெருக்கமான, நம்பகமான பங்காளி நாடுகள் என்ற முறையில், தொடர்ந்து உதவியாக இருந்து அத்தியாவசிய வர்த்தகம், விநியோகச் செயல்பாட்டு முறைகளில் பரஸ்பரம் ஆதரவளிக்கப்போவதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகள் சார்ந்த நடவடிக்கைகளை தங்கள் குழுக்கள் எடுக்கும் என்றும் சுல்தானை விரைவில் மீண்டும் சந்திக்கத் தாம் விரும்புவதாகவும் திரு வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்