சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மே மாதம் பதவியேற்றதை அடுத்து மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணத்தின் நிறைவாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜூன் 12ஆம் தேதி கலந்துகொண்டார்.
பிரதமர் வோங்கின் அறிமுகப் பயணம், ஜூன் 11ஆம் தேதி புருணையில் தொடங்கியது.
அங்கு புருணை சுல்தான் ஹஸனல் போல்கியா ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் திரு வோங் கலந்துகொண்டார்.
இருநாட்டு பிரதமர்களும் தங்களின் நாடுகளுக்கிடையிலான சிறப்பு உறவை மறுஉறுதிப்படுத்திக்கொண்டனர்.
பல ஆண்டு காலமாக சிங்கப்பூரும் புருணையும் பங்காளித்துவ ஆதரவை வழங்கி வந்துள்ளதாகவும் ஆபத்தான, அழுத்தமிக்க உலகை எதிர்கொள்ள இவ்விரு சிறிய நாடுகளும் தொடர்ந்து கைகோத்து செயல்படும் என்றும் மதிய விருந்தின்போது நிகழ்த்திய உரையில் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
கூட்டுச் செய்தியாளர் சந்திப்பைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.