பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 6.45 மணிக்குத் தொடங்கும்.
அங் மோ கியோவிலுள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது உரையை நிகழ்த்துவார்.
முதலில் மலாய் மொழியிலும், அதைத் தொடர்ந்து மாண்டரின் மொழியிலும் பேசுவார். பின்னர் இரவு 8 மணிக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார்.
உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் பிரதமரின் உரை நேரடியாக ஒளிபரப்பப்படும். பிரதமர் வோங், பிரதமர் அலுவலக யூடியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.
நேரடி ஒளிபரப்பை தவறவிடுபவர்கள் ஆகஸ்ட் 18 முதல் www.youtube.com/pmosingapore அல்லது www.pmo.gov.sg ஆகிய தளங்களில் உரையைக் காணலாம்.