வீடமைப்பு மானியங்கள் தொடர்பாகத் தவறான பதிவு; பொஃப்மா திருத்தத்துக்கு உத்தரவு

வீடமைப்பு மானியங்கள் தொடர்பாகத் தவறான பதிவு; பொஃப்மா திருத்தத்துக்கு உத்தரவு

2 mins read
4d583f65-e3de-4e40-8325-d5cc4cd2ff6c
வீவக மறுவிற்பனை வீடுகளை முதல்முறையாக வாங்க தகுதி பெறுவோருக்கான வீடமைப்பு மானியங்கள் தொடர்பாக திரு லியோங் சீ ஹியானின் பதிவு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது, போலியானது என்று தேசிய வளரச்சி அமைச்சு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு மானியங்கள் தொடர்பாகப் போலிச் செய்திகளைப் பதிவிட்ட வலைப்பதிவாளரும் நிதி ஆலோசகருமான லியோங் சீ ஹியானுக்கு எதிராக பொஃப்மா திருத்தம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு மானியம் பெறுபவர்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதி பெறுபவர்களா என்பதை உறுதி செய்யும் அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

“விலை உயர்ந்த பிடிஓ வீடுகளை வாங்க பண வசதி உள்ளவர்களுக்கு ஏன் கூடுதல் உதவி வழங்கப்படுகிறது?” என்று திரு லியோங் கேள்வி எழுப்பியிருந்தார்.

தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளை மட்டுமே வாங்கக்கூடிய, அவ்வளவாக வசதி இல்லாதவர்களை அந்த மானியங்கள் சென்றடைய வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

வீவக மறுவிற்பனை வீடுகளை முதல்முறையாக வாங்க தகுதி பெறுவோருக்கான வீடமைப்பு மானியங்கள் தொடர்பாக திரு லியோங்கின் பதிவு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது, போலியானது என்று தேசிய வளரச்சி அமைச்சு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று தெரிவித்தது.

திரு லியோங்கின் பதிவுக்கு தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பொஃப்மா திருத்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, தமது பதிவுக்கு அருகில் வீடமைப்பு மானியம் தொடர்பாக அரசாங்கத்தின் விளக்கத்துக்கான இணைப்பைத் திரு லியோங் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான வீடமைப்பு மானியம் பெறுபவர்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதி பெறுபவர்களா என்பதை உறுதி செய்யும் அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று திரு லியோங் கூறுவது உண்மையல்ல என்று அமைச்சு கூறியது.

வீவக மறுவிற்பனை வீடுகளை முதல்முறையாக வாங்குவோருக்கு மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம், மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம், பெற்றோர் அல்லது பிள்ளைகளுக்கு அருகாமையில் வசிப்போருக்கான மானியம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம், மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம் ஆகியவற்றுக்குத் தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

வீவக மறுவிற்பனை வீடு வாங்க மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம் மூலம் குறைந்த வருமான ஈட்டுவோருக்குக் கூடுதல் ஆதரவு கிடைப்பதை அமைச்சு சுட்டியது.

குறிப்புச் சொற்கள்