தி ஆன்லைன் சிட்டிசன் ஆசிரியர், வெளியீட்டாளருக்கு பொஃப்மா உத்தரவு

தி ஆன்லைன் சிட்டிசன் ஆசிரியர், வெளியீட்டாளருக்கு பொஃப்மா உத்தரவு

1 mins read
ce08a99f-ae96-4732-ae9c-bbbdfe601d33
ஏப்ரல் 21ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் டெர்ரி சூ. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காஸா போரின்போது இஸ்ரேலியத் தற்காப்புப் படையில் சிங்கப்பூரர்கள் இருவர் சேவையாற்றியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அரசாங்கத்தின் பதில் குறித்துத் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ இணையத்தளத்தின் தலைமை ஆசிரியருக்கும் அதன் வெளியீட்டாளருக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையவழி பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா), இந்தத் திருத்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொஃப்மா அலுவலகத்திற்குத் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம் அறிவுறுத்தியுள்ளதாக வியாழக்கிழமை (மார்ச் 26) உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் டெர்ரி சூவுக்கும் அந்த இணையத்தளத்தை நிர்வகிக்கும் தைவானைச் சேர்ந்த ‘மியாவ் யி இன்ஃபோடெக்’ நிறுவனத்திற்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை

மார்ச் 5ஆம் தேதி தி ஆன்லைன் சிட்டிசன் தளம், அதன் சமூக ஊடகப் பக்கங்கள், ‘ஹைடோ’ ஊடகத் தளம் ஆகியவற்றில் அந்தச் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் ஏதேனும் குற்றவியல் விதிமீறல்களுக்கு உட்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸா போரின்போது இஸ்ரேலியப் படையில் சிங்கப்பூரர்கள் சேவையாற்றியது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் சண்முகம் அளித்த பதில் தொடர்பில் அந்தக் கட்டுரையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்