‘போல்ஸ்டார் 4’ வகை கார்கள் ‘ஏ’ பிரிவு ‘சிஓஇ’ சான்றிதழுக்குத் தகுதி பெற்றுள்ளன

‘போல்ஸ்டார் 4’ வகை கார்கள் ‘ஏ’ பிரிவு ‘சிஓஇ’ சான்றிதழுக்குத் தகுதி பெற்றுள்ளன

1 mins read
0529ecbb-9a2b-43c7-91b3-6654cd838a2a
மிகவும் சக்திவாய்ந்த வாகனங்களில் ஒன்றான போல்ஸ்டார் 4 வகை கார்கள், ஏ பிரிவு சிஓஇ சான்றிதழுக்குத் தகுதிபெற்றுள்ளன. - படம்: போல்ஸ்டார் நிறுவனம்
Google News Preferred Icon

சுவீடனில் தயாரிக்கப்படும் மிகவும் சக்திவாய்ந்த ‘போல்ஸ்டார்’ மின்வாகனங்களின் வரிசையில் ‘போல்ஸ்டார் 4’ வகை கார் ‘சிஓஇ’ சான்றிதழ் பெறுவதற்கு, ‘ஏ’ பிரிவில் தகுதிபெற்றுள்ளது.

வழக்கமாக அந்த வகைக் கார்கள் 200 ‘கிலோவாட்’ மின்சக்தியில் இயங்கக்கூடியவை. ஆகையால் பிரிவு ‘பி’ ‘சிஓஇ’ சான்றிதழுக்குத்தான் அவை தகுதிபெறும்.

ஆயினும் தற்போது அவை 110 கிலோவாட் சக்தியுடன் இயங்கும் விதமதாக வடிவமைக்கப்பட்டு, $287,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை 200 கிலோவாட் மின்சக்தியில் இயங்கும் அதே வகைக் கார்களைவிட $15,000 குறைவாக விற்பனையாகின்றன.

கார் சக்கரங்களின் சுழற்சி அதிவேகமாக அமைந்திருப்பதோடு 110 கிலோவாட் மின்சக்தியுடன் போல்ஸ்டார் 4 வகை செயல்படுகிறது. கார் நகராத நிலையில் இருந்து ஓட ஆரம்பித்ததும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 முதல் 10.7 நொடிகளில் எட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

பெரிய சக்திவாய்ந்த மற்ற போல்ஸ்டார் வகைக் கார்களைப்போலவே முக்கியச் சிறப்பம்சங்கள் அக்காரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் கார் 100 கிலோவாட் பேட்டரி சாதனத்தில் மின்னூட்டப்பட்டு ஓடக்கூடிய மொத்த தொலைதூரம் 620 கிலோமீட்டர் எனவும் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் 17.8 கிலோவாட் மின்சக்தியைப் பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் லெங் கீ ரோட்டில் வியர்ன்ஸ் ஆட்டோமோடிவ் நிறுவனம் போல்ஸ்டார் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

குறிப்புச் சொற்கள்
மின்சாரம்மின்வாகனம்சிஓஇ கட்டணம்சொகுசுவேகம்கார்சான்றிதழ்