ரயான் டிட்டோ அப்துல்லா என்ற இந்த 15 வயதுச் சிறுவனைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) முதல் காணவில்லை.
இந்தச் சிறுவன் இருக்குமிடம் பற்றிய விவரங்கள் யாருக்காவது தெரிந்தால் அதைத் தன்னிடம் தெரியப்படுத்தும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
புளோக் 584ல் அங் மோ கியோ அவென்யூ 3ல் பிப்ரவரி 26ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ரயான் கடைசியாக காணப்பட்டார்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000, என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம். வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள +65 6255-0000 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம்.
அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையத்தளத்தில் தகவல்களைத் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


