பாதிக்கப்பட்டோரின் மனவுளைச்சலுக்குக் காவல்துறையே காரணம்: கழிப்பறைகளில் ரகசியமாகப் படமெடுத்த மருத்துவர்

பாதிக்கப்பட்டோரின் மனவுளைச்சலுக்குக் காவல்துறையே காரணம்: கழிப்பறைகளில் ரகசியமாகப் படமெடுத்த மருத்துவர்

ஆஸ்திரேலியாவின் மருத்துவமனைக் கழிப்பறைகளில் 874 பேரை ரகசியமாகப் படமெடுத்த சிங்கப்பூர் பயிற்சி மருத்துவர்
காணொளிப் படம்: விக்டோரியா கெளன்டி நீதிமன்றம்

29 Nov 2026 - 7:38 pm

1 mins read

மூன்று ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் 874 பேரை ரகசியமாகப் படமெடுத்தார்.

பாதிக்கப்பட்டோரின் மனவுளைச்சலுக்குக் காவல்துறைதான் காரணம் என்று ரயன் சோ என்ற அந்த 29 வயது பயற்சி மருத்துவர் கூறியிருக்கிறார். தனது செயல்களைப் பற்றிக் காவல்துறையினர் தெரியப்படுத்தியதால்தான் பாதிக்கப்பட்டவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளானதாக அவர் மெல்பர்ன் நகர நீதிமன்றம் ஒன்றில் கூறியிருக்கிறார்.

மூன்று நாள் நீதிமன்ற அமர்வுக்குப் பிறகு ரயன் சோ கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 26) கைது செய்யப்பட்டார். அவர் தனது செயல்களுக்கு வருந்துகிறாரா என்பது பற்றியும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அப்போது பேசினர். ரயன் சோவுக்குத் தண்டனை விதிப்பதில் சிக்கல்கள் இருப்பதை நீதிபதி ஒப்புக்கொண்டார் என்று சிஎன்ஏ ஊடகம் செய்தி வெளியிட்டது.

அவருக்கு வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

2024லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவின் பீட்டர் மெக்கலம் புற்றுநோய் நிலையம், ரோயல் மெல்பர்ன் மருத்துவமனை, ஆஸ்டின் மருத்துவமனை ஆகியவற்றில் சந்தேகம் எழாதோரை 3,042 முறை படமெடுத்ததை ஒப்புக்கொண்டார். சக பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர் ஒருவரின் இரு இளம் மகள்கள் உள்ளிட்டோர் அவர் படமெடுத்தவர்களில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்