காரில் தப்பிய மூவரைத் துரத்திப் பிடித்த காவல்துறை

1 mins read
b6ace2e5-b179-4089-908b-d14579a7c53d
காவல்துறையினர் துரத்தி முடக்கிய காருக்குள் போதைப்பொருள்கள் காணப்பட்டன. - படம்: ஷின் மின்

காவல்துறையிடமிருந்து காரில் தப்பிக்க முயன்ற மூவர் ஞாயிற்றுக்கிழமை காலை (ஜூன் 29) கைது செய்யப்பட்டனர். 

ஜாலான் புசாரை நோக்கிச் செல்லும் சையது ஆல்வி ரோட்டில் அதிகாலை 5.45 மணிக்கு, காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கார் ஒன்று தாறுமாறாக நிறுத்தப்பட்டதைக் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் கைது. 
போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் கைது.  - படம்: ஷின் மின் நாளிதழ்

காரை அதிகாரிகள் சோதிக்க முற்பட்டதை அடுத்து அந்தக் காரின் 25 வயது கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து. காரை விரைவாக ஓட்டிச் சென்றார். இறுதியில் காவல்துறையினர் அந்தக் காரை வழிமறித்து ஆடவரைக் கைது செய்தனர்.

போக்குவரத்துக் குற்றங்களுக்காகக் காவல்துறையினரால் தேடப்பட்ட ஆடவர், சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது பின்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஆடவரை அதிகாரிகள் கைது செய்துகொண்டிருந்தபோது, காரில் இருந்த 25 வயது பெண் பயணி, அந்தக் காரை ஒட்டிச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

கைதாகிய மூவரின் குற்றச்செயல்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்து வருகிறது.
கைதாகிய மூவரின் குற்றச்செயல்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. - படம்: ஷின் மின் நாளிதழ்

சையது ஆல்வி ரோட்டில் காவல்துறையினர் பின்னர் அந்தக் காரைக் கண்டுபிடித்தனர். காவல்துறையினரைக் கண்டவுடன் விரைந்து சென்ற கார், லாரியுடன் மோதியது

அந்தப் பெண், காரின் மற்றொரு பயணியாக இருந்த 23 வயது பெண்ணுடன் போதைப்பொருள் குற்றங்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.   

கட்டுப்படுத்தப்பட்ட வேதிப்பொருள்களும் அவற்றின் பயன்பாட்டுக் கருவிகளும் காவல்துறையினர் காருக்குள் கண்டுபிடித்தனர். 

கைதாகிய மூவரின் குற்றச்செயல்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்