மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய அதிகாரிக்கு அபராதம்

1 mins read
5919f07b-1109-4f33-a17c-2b5aa1a5f51f
படம்: - பிக்சாபே

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக கடலோர காவல்படையைச் சேர்ந்த பொறுப்பதிகாரியான 48 வயது லிம் சுவி சென்னுக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த அதிகாரி கடந்த மே 27ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் ஈஸ்ட் கோஸ்ட் துணைச் சாலையில் ஃபோர்ட் சாலையை நோக்கி காரை ஓட்டியபோது இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

லிம்முக்கு விதிக்கப்பட்ட அபராதத்துடன் அக்டோபர் 26ஆம் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என சிங்கப்பூர் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கூறியது.

குறிப்புச் சொற்கள்