சிங்கப்பூர் காவல்துறையின் அவசர குறுஞ்செய்தி எண் 70999 ஆக மாற்றப்படவுள்ளது. அது அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
காவல்துறையிடம் இருந்து வரும் அவசர குறுஞ்செய்திகள் இனி 70999 ஆக இருக்கும் என்று வெள்ளிக்கிழமையன்று காவல்துறை அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது.
இதற்கு முன்னர் அந்த அவசர குறுஞ்செய்தி எண் 71999ஆக இருந்தது.
உள்துறை அமைச்சின்கீழ் வரும் உள்துறை குழு பிரிவுகளுக்கான எண்களை சீர்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உள்துறை குழு பிரிவுகள் அனுப்பும் குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒரே எண்ணிலிருந்து வருவதால் அதை மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மாற்றம், மோசடிக்காரர்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘எஸ்ஜிசெக்யூர்’ (SGSecure) திட்டத்தின் ஒரு பகுதியாக 2016ஆம் ஆண்டு முதல் காவல்துறையின் அவசர குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
அவசர காலத்தில் தொலைபேசி மூலம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். இது வாய் பேச முடியாதவர்களுக்கும் காது கேட்காதவர்களுக்கும் உதவியாகவும் இருக்கும்.