$10 மில்லியனுக்கும் மேல் இழப்பு: மோசடியில் ஈடுபட்ட 373 நபர் மீது விசாரணை

1 mins read
fb4c0740-fdc9-4396-8206-4416b0b67d28
 விசாரணையில் 236 ஆண்களும் 137 பெண்களும் அடங்குவர். - படம்: எஸ்பிஎச்

$10 மில்லியனுக்கும் மேல் பாதிப்படைந்தோர் இழந்துள்ள மோசடிக் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தில், 373 நபர்களிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அவர்களில் 236 ஆண்களும் 137 பெண்களும் அடங்குவர். கடந்த நவம்பர் 24 அன்றும் டிசம்பர் 7 அன்றும் நடந்த சோதனைகளில் அவர்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் என்று நேற்று காவல் துறை கூறியது.

முதலீடு, மின் வர்த்தகம், கடன், வேலைவாய்ப்பு, அரசாங்க அதிகாரிகளாக போலியான அடையாளம் காட்டிக்கொள்வது, இணையக் காதல், சமூக ஊடகவியளாளர் போல நடித்தல் போன்ற பலதரப்பட்ட மோசடிக் குற்றங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏமாற்றுதல், பண மோசடி, உரிமம் இல்லாத பணபரிமாற்றம் போன்ற குற்றங்களுக்காக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை வாசமும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்