விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து தப்பித்த ஓட்டுநர் பிடிபட்டார்

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து தப்பித்த ஓட்டுநர் பிடிபட்டார்

1 mins read
f61b9b56-16d4-4cf5-b29c-40202e1605b6
கெவனா சாலையில் உள்ள வளைவைக் கடந்தபோது இந்த சாம்பல் நிற ஹோண்டா ஸ்ட்ரீம் ரக கார் சறுக்கி விபத்துக்குள்ளானது. SG ROAD VIGILANTE/FACEBOOK -

இஸ்தானா மாளிகை வளாகத்துக்கு அருகில் சனிக்கிழமை (மார்ச் 4) விபத்துக்குள்ளான தமது காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துச் சென்ற 27 வயது கார் ஓட்டுநரை காவல்துறை, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்துள்ளது.

இஸ்தானா மாளிகை வளாகத்துக்கு வெளியே கெவனா சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து காவல்துறைக்கு காலை 7.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. கெவனா சாலையில் உள்ள வளைவைக் கடந்தபோது அந்த சாம்பல் நிற ஹோண்டா ஸ்ட்ரீம் ரக கார் சறுக்கி விபத்துக்குள்ளானது என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.