காவல்துறை அதிகாரி சாலை விபத்தில் காயம்

காவல்துறை அதிகாரி சாலை விபத்தில் காயம்

1 mins read
d11cf548-6ff2-4a50-9441-f5f894865915
விபத்துக்குள்ளான நீல நிற காரின் முன்பகுதி சேதமடைந்தது. படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட் -

நிக்கோல் ஹைவே-ராஃபிள்ஸ் பொலிவார்ட் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (17-1-2023) நிகழ்ந்த சாலை விபத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

அந்த அதிகாரி சென்ற மோட்டார்சைக்கிளும் காரும் மோதிய இந்த விபத்து காலை 10.50 மணிக்கு நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்து குறித்து காலை 10.55 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்தது என்றும் காயமடைந்த அதிகாரி ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

30 வயதான அந்த அதிகாரி மருத்துவமனைக்குச் சென்றபோது சுயநினைவுடன் இருந்ததாகவும் அது கூறியது.

விபத்தில் சிக்கிய நீல நிற கார், முன்பகுதி சேதமடைந்த நிலையில் சாலைச் சந்திப்பு நடுவே நின்றிருந்ததை எஸ்ஜி ரோடு விஜிலன்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் காட்டியது.

விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.